ஆஸிக்கு சவால் கொடுப்பதில் இந்தியா டாப் தான்.. ஆனா அவங்ககிட்ட தோற்றா உலகமே அழிஞ்ச மாதிரி.. கமின்ஸ்

Pat Cummins
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மிகவும் வலுவான தரமான திறமையான அணியாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு தற்சமயத்தில் சவாலைக் கொடுக்கும் முதன்மையான அணியா இந்தியா இருக்கிறது என்றால் மிகையாகாது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது குதிரைக் கொம்பான விஷயமாகும். அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது.

அதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் தோற்கடித்த முதல் அணியாக இந்தியா சாதனை படைத்தது. மேலும் 2014க்குப்பின் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்று வந்தது. அதன் காரணமாக ஆசஸ் தொடரை விட இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் தொடர் தரமானது என்ற கருத்துக்கள் எழுந்தன.

- Advertisement -

இந்தியா டாப் தான்:

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை என்ற 3 – 1 (5) என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா அந்தத் தோல்விகளுக்கு இந்தியாவுக்கு பதிலடிக் கொடுத்தது. இந்நிலையில் தங்களுக்கு போட்டியைக் கொடுப்பதில் இந்தியா மிகவும் சிறந்த கிரிக்கெட் அணி என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் தோற்றால் அது உலகமே அழிந்தது போன்ற உணர்வைக் தங்களுக்குக் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி கமின்ஸ் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக கடந்த கோடைக்காலம் அற்புதமாக அமைந்தது. அதை நான் நீண்ட காலம் மறக்க மாட்டேன். போட்டியின் அடிப்படையில் கடைசியாக இங்கு நடைபெற்ற 2 தொடர்களை இந்தியா வென்றார்கள்”

- Advertisement -

ஆஷஸ் அதை விட டாப்:

“மறுபுறம் இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நாங்கள் டாமினேட் செய்து வருகிறோம். இந்தக் கோடைகாலத்தில் நம்பர் டாப் டெஸ்ட் 2 அணிகள் மோதின. அந்தக் கோணத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதுவது சாதாரணத் தொடரை விட பெரிதானது. ஆனால் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்றால் அது உலகம் முடிவுக்கு வருவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும்”

இதையும் படிங்க: இந்தியாவின் சாதகத்தை புரிஞ்சுக்க ராக்கெட் சைன்ஸ் தேவையில்லை.. துபாயில் பிரச்சனையும் இருக்கு.. டுஷன் பேட்டி

“அந்தக் கோணத்தில் ஆஷஸ் தொடர் இப்போதும் பெரியது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. டிசம்பர் மாதம் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement