எல்லாமே இந்திய அணிக்கு தான் சாதகமா இருக்கு.. இந்திய அணியை விமர்சித்த நாசர் ஹுசேன் – விவரம் இதோ

nasser
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருந்த இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றன. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இரண்டு குழுக்களில் நான்கு நான்கு அணிகள் பிரிக்கப்பட்டன.

எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கு : நாசர் ஹுசேன்

அதனை தொடர்ந்து தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இரண்டு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்பின்னர் அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது வரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஆனால் குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அரையிறுக்கு தகுதி பெறும் என்று இதுவரை முடிவாகவில்லை.

இறுதிவரை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது கடுமையான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய அணி வெற்றி பெறுவதற்காகவே அனைத்து ஏற்பாடுகளும் அவர்களுக்கு சாதகமாக செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மற்ற அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாறி மாறி சென்று வரும் வேளையில் இந்திய அணி மட்டும் எங்கும் பயணிக்காமல் துபாய் மைதானத்திலேயே அனைத்து போட்டிகளையும் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என்பதனால் இந்திய அணிக்கு எளிதாக அந்த சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படிங்க : விராட் கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இன்னும் இத்தனை வருஷம் விளையாடுவார் – ஹெர்ஷல் கிப்ஸ் நம்பிக்கை

ஆனால் மற்ற அணிகள் மைதானத்திற்கு ஏற்ப வெவ்வேறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு சாதகமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளதாக நாசர் ஹுசேன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement