இறுதிச்சடங்கு முடிந்த கையோடு இந்திய அணிக்காக முழு அர்ப்பணிப்பை காட்டிய மோர்னே மோர்கல் – விவரம் இதோ

Morkel
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது துபாய் சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு நியூசிலாந்து அணியுடன் சேர்த்து தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணியுடன் இணைந்த மோர்னே மோர்கல் :

அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து மார்ச் 2-ஆம் தேதி விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது துவங்குவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக மோர்னே மோர்கலின் தந்தை உயிரிழந்ததால் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மோர்னே மோர்கல் சொந்த நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களை முடித்துள்ள வேளையில் இந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இத்தருவாயில் மீண்டும் அவர் இந்திய அணியுடன் இணைந்து பணியாற்ற துபாய் வந்தடைந்துள்ளார்.

- Advertisement -

ஐசிசி அகாடமி மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் மோர்னே மோர்கல்லும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீருடனும் அடுத்தகட்ட திட்டம் குறித்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க : இந்தியா மாதிரி பாகிஸ்தானிலும் வெளிச்சம் இல்லையா? இங்கிலாந்து வீரரை கிண்டலடித்த கவாஸ்கர்.. காரணம் என்ன?

ஏற்கனவே இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தினை பிடித்து அடுத்த சுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement