நல்லவேளை பாண்டியா வரல.. விராட் கோலி போல கில்லுக்கு சுயநலமின்றி உதவிய ராகுல்.. ரசிகர்கள் பாராட்டு

KL Rahul
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து அசத்தியது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101*, ராகுல் 41* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்கள்.

அந்த வெற்றிக்கு சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய துணை கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அந்தப் போட்டியில் 229 ரன்கள் இலக்கு கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் அதை சேசிங் செய்வதற்கு பிட்ச் கடினமாகவே இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி திரும்பினார்.

- Advertisement -

பாண்டியா வரல:

அடுத்ததாக வந்த விராட் கோலி, அக்சர் படேல் விரைவாகவே பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய சுப்மன் கில் நங்கூரமாக பேட்டிங் செய்து அரை சதத்தை கடந்து இந்தியாவை பற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ராகுல் 9 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை வங்கதேசம் கோட்டை விட்டது.

அதை பயன்படுத்திய ராகுல் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி கில் சதத்தை அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். அதை வீணடிக்காத கில் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்து தன்னுடைய 8வது சதத்தையும் அடித்து அசத்தினார். அதே போல ராகுல் 41* (47) ரன்கள் குவித்து சிக்ஸருடன் பினிஷிங் செய்தார்.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டு:

அதை பார்த்த இந்திய ரசிகர்கள் நல்லவேளை ராகுல் அவுட்டாகி பாண்டியா வரவில்லை என்று சமூக வலைதளங்களில் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் 2023 வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுக வீரர் திலக் வர்மா 49* ரன்களில் இருந்த போது அவருக்கு முதல் அரை சதத்தை அடிக்கும் வாய்ப்பை கொடுக்காத பாண்டியா சிக்ஸர் அடித்து ஃபினிஷிங் செய்தார்.

மேலும் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் கில் 80களில் இருந்த போது எதிர்ப்புறம் வந்த பாண்டியா அடித்து நொறுக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த கில் தனது சதத்தை விரைவாக எட்ட அதிரடி காட்ட முயற்சித்து அவுட்டானார். ஆனால் அது போன்ற காரியத்தை செய்யாத ராகுல் இளம் வீரராகவும் இந்தியாவின் வெற்றிக்கும் பாடுபட்ட கில் சதத்தை எட்ட உதவினார்.

இதையும் படிங்க: கொண்டாட ஆரம்பிச்சேன் ஆனா ரோஹித் மேல எந்த தப்பும் இல்ல.. சரித்திரத்தை தவற விட்ட அக்சர் பேட்டி

ஏற்கனவே 2023 உலகக் கோப்பையிலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இதே போல விராட் கோலி சதமடிக்க ராகுல் உதவினார். அந்த வகையில் ராகுல் தன்னுடைய அரை சதத்தை பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி நடந்து கொண்டதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement