இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் தொடர்ந்து மும்பை அணியின் ஆதிக்கம் நிலவி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மும்பை அணியே ரஞ்சி டிராபி தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் தமிழக அணியால் அரையிறுதி சுற்றை தாண்ட முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கடந்த முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற தமிழக் அணி இம்முறை காலிறுதி சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.
தமிழக அணி ரஞ்சி கோப்பையை வெல்ல முடியாமல் போக இதுவே காரணம் :
கடந்த ஆண்டு தமிழக அணி ரஞ்சி கோப்பையில் தோல்வியை சந்தித்தபோது மும்பையைச் சேர்ந்த பயிற்சியாளர் மற்றும் தமிழக கேப்டன் சாய் கிஷோர் ஆகியாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அவர்கள் இருவரது அந்த கருத்து வேறுபாடு காரணமாக மும்பை பயிற்சியாளர் தனது பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அணி ரஞ்சி கோப்பையை வெல்ல முடியாமல் தவிப்பது எதனால் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : தமிழக அணியை சேர்ந்த வீரர்கள் பெரும்பாலும் திறமையான வீரர்களாக இருந்தும் அவர்களின் மனோபாவம் போட்டியை வெல்லும் அளவிற்கு இல்லாமல் இருக்கிறது.
பள்ளி, கல்லூரி போன்ற போட்டிகளில் இருந்து வீரர்கள் வளர்ந்து வரும் வேளையில் கோப்பையை வெல்ல வேண்டிய உத்வேகத்துடன் பயணிக்க வேண்டும். ஒருபுறம் ரஞ்சி தொடரில் தமிழக வீரர்கள் தடுமாறினாலும் மறுபுறம் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள்.
தோனியின் தலைமையிலான சென்னை அணி இப்படி கோப்பையில் வெல்ல அவர்களது திடமான மனோபாவமே காரணம். அந்த வகையில் தமிழக அணிக்காக விளையாடும் வீரர்களும் கோப்பையை வெல்லும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டு உறுதியுடன் போராடினால் நிச்சயம் ரஞ்சி டிராபி தொடரையும் கைப்பற்ற முடியும்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தப்போகும் 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – ஷிகர் தவான் கருத்து
இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் லட்சுமிபதி பாலாஜி பயிற்சியாளராக இருந்தார். நட்சத்திர வீரர்களை பயிற்சியாளராக கொண்டு வந்தால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட முடியும் என்று நான் கேள்விப்படவில்லை. முதலில் கோப்பையை வெல்லும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



