விராட் கோலியை பத்தி சந்தேகமே வேணாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் சம்பவம் காத்திருக்கு – சிறுவயது கோச் அதிரடி

Rajkumar
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நாளை கராச்சி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருக்கின்றன. அதற்கு அடுத்து இந்திய அணியானது பிப்ரவரி 20-ஆம் தேதி பங்களாதேஷ் அணியை எதிர்த்து தங்களது முதல் லீக் போட்டியில் விளையாட இருக்கிறது.

நிச்சயம் விராட் கோலியின் பெஸ்ட் வரும் : ராஜ்குமார் சர்மா

துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு சென்று ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரரான விராட் கோலியின் பேட்டிங் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி சமீபத்தில் பேட்டிங் தடுமாறி வருவதால் அவரது ஆட்டம் இந்த தொடரில் எப்படி இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி பழையபடி தான் ஒரு சாம்பியன் வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளராக ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு சில போட்டிகள் மோசமாக இருந்தால் விராட் கோலி ஃபார்மில் இல்லை என்று யாரும் கூற முடியாது. ஏனெனில் அவரது சாதனைகளை எடுத்து பார்த்தால் அவர் இத்தனை ஆண்டு காலம் இந்திய அணிக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் பார்க்க முடியும்.

- Advertisement -

விராட் கோலி எப்போதுமே ஒரு சாம்பியன் வீரர் தான் அவர் முன்பு எவ்வாறு சிறப்பாக செயல்பட்டாரோ அதேபோன்று இந்த சாம்பியன் டிராபி தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது சிறப்பான இன்னிங்ஸ் கண்டிப்பாக வெளியே வரும் என்று தான் நம்புவதாக ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்.. பாக் மண்ணில் முதல்முறையாக – நடக்கப்போகும் சம்பவம்

மேலும் பும்ரா குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது இடம் இந்திய அணியில் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த தொடரில் துருதிர்ஸ்டவசமாக அவர் விளையாட முடியாமல் போனது ஒரு வகையில் நமக்கு பாதகம்தான் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement