மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்கள் காரணமாக பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ள இந்திய அணி துபாயிலேயே அனைத்து போட்டிகளையும் விளையாட இருக்கிறது.
டாஸ் வென்றால் இந்திய அணி இதைத்தான் செய்யணும் :
இந்திய அணி குரூப் சுற்று பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர் கொள்ள உள்ளதால் அரையிறுதிக்கு போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, ஜடேஜா, சுப்மன் கில் போன்ற பேட்ஸ்மேன்களும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி போன்ற பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இந்திய அணி பலமான அணியாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இந்திய அணி வெளி பார்வைக்கு மட்டுமே பலமான அணியாக இருப்பதாகவும் நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் பந்துவீச்சு துறையில் இந்திய அணி பலவீனமாக இருப்பதாகவும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
நமது அணியின் பலம் என்னவோ அதைத்தான் நாம் இரண்டாவதாக செய்ய வேண்டும். எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி டாசில் வெற்றி பெறும் பட்சத்தில் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் நமது பந்துவீச்சு தற்போது பலம் குறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே முதலில் பந்துவீசி விட்டு பிறகு நமது பலமான பேட்டிங் ஆர்டரை வைத்து சேசிங் செய்து வெற்றி பெறலாம்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு எப்படி இருக்கு – ஓர் அலசல் இதோ
இப்படி ஒரு முடிவை எடுத்தால் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெல்ல முடியும். அதே போன்று நமது அணியில் சிறப்பான சுழற்பந்து வீந்துச்சாளர்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களைக் கொடுத்தாலும் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து கட்டுப்படுத்த முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



