டி20 கிரிக்கெட் வரலாற்றில் நாளை முக்கிய சாதனை படைக்க உள்ள சர்ச்சை நாயகன் – ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் டி20 தொடரில் ரோகித் சர்மா புதிய உலக சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு உள்ளது.

Rohith

- Advertisement -

அதன்படி நாளைய போட்டியில் ரோகித் சர்மா படைக்க இருக்கும் சாதனை யாதெனில் டி20 போட்டிகளில் இதுவரை ரோகித் சர்மா 102 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் அடுத்த டி20 வீரர் என்ற இடத்தில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான கிறிஸ் கேல் 105 சிக்சர்களுடன் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து மார்ட்டின் கப்டில் 103 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா நாளைய போட்டியில் இன்னும் 4 சிக்சர்கள் அடிப்பதன் மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement