சச்சின், கோலி மாதிரி சுப்மன் கில்லிடமும் அந்த பசி இருக்கு.. இன்னும் பெருசா வருவாரு – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

Sanjay Manjrekar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 102 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 112 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த கடைசி போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

சச்சின், கோலி செய்ததை கில்லும் செய்றாரு : மஞ்சரேக்கர் பாராட்டு

அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த அவர் மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்ததால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்த இங்கிலாந்து தொடருக்கான ஒரு நாள் தொடரில் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில் மீண்டும் தனது சிறப்பான ஃபார்மிற்கு வந்தது குறித்தும் அவர் அடித்த சதம் குறித்தும் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரராக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதாவது : நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாம் குறிப்பிட்டு பார்க்க வேண்டிய விடயம் யாதெனில் : சுப்மன் கில் அவருடைய சதத்தை மிகவும் எளிமையாக கடந்து அசத்தினார்.

கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதத்தை நோக்கி சென்று அதனை முடித்தும் காண்பிப்பார்கள். அந்த வகையில் சுப்மன் கில்லிடமும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக சதம் அடிக்கும் வேட்கை இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொறுத்தவரை நிச்சயம் மிக முக்கியமான வீரராக கில் இருப்பார். அவருடைய ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளை தவிர்த்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்போது 25 வயதான அவர் தொடர்ந்து விளையாடும்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்த 2 காரணத்தால் இந்தியாவை மாதிரி டீமை சாய்த்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை தூக்குவோம்.. சாண்டோ

நேற்றைய போட்டியில் சுப்மன் கில் அடித்த சதத்தின் மூலம் முதல் 50 போட்டிகளில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரராகவும், உலகளவில் முதல் 50 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் தனது பெயரை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement