இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் தங்களை ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்த இந்தியா உலக சாம்பியனுக்கு அடையாளமாக அசத்தியது. அந்தத் தொடரில் புனேவில் நடைபெற்ற போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியாவுக்கு கடைசி ஓவரை எதிர்கொண்ட சிவம் துபே ஐந்தாவது பந்தில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அப்போது அவரை சோதித்த இந்திய அணியின் மருத்துவர் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார். தொடர்ந்து விளையாடிய துபே கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.
சாதகமான ஐசிசி நடுவர்:
அதன் பின் இந்தியா பேட்டிங் செய்ய வந்த போது சப்ஸ்டிடியூட் விதிமுறையைப் பயன்படுத்திய இந்தியா அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணாவை விளையாட வைத்தது. அந்த வாய்ப்பில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதற்கு ஜோஸ் பட்லர் முதல் கெவின் பீட்டர்சன் வரை முன்னாள் இந்நாள் இங்கிலாந்து கேப்டன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் பேட்ஸ்மேன் விலகினால் மாற்று பேட்ஸ்மேன், பவுலர் விலகினால் மாற்று பவுலர் விளையாட வேண்டும் என்பது ஐசிசி விதிமுறை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் அந்தப் போட்டியில் முன்னாள் இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத்தை ஐசிசி போட்டி நடுவராக நியமித்திருந்தது. ஆனால் இந்தியாவைச் சேர்ந்த அவர் இந்தியாவுக்கு சாதகமாக ஏன் இருக்க மாட்டார்? என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மற்றும் ஐசிசியின் மற்றொரு நடுவர் கிறிஸ் ப்ராட் கூறியுள்ளார்.
முகத்தில் கரி:
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது போன்ற சூழ்நிலைகளை தடுக்கவே பொதுவான நடுவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். ஆனால் தற்போது ஐசிசி ஏன் மீண்டும் பழைய ஒருதலைப்பட்சமான ஊழல் முறைக்கு திரும்பியுள்ளது? ஒரு இந்திய போட்டி நடுவர் எப்படி இந்தியாவுக்கு சாதகமான இந்த முடிவை தடுத்து நிறுத்துவார்? எனவே போட்டி நடுவர்கள் பொதுவானவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இப்படி செஞ்சு தரமான இந்தியாவின் பெயரை கெடுக்காதிங்க.. அது இல்லாமையே ஜெயிக்க முடியும்.. கவாஸ்கர் விமர்சனம்
அதைப் பார்த்த ஒரு இந்திய ரசிகர் “கடந்த வருடம் லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நீங்கள் ஏன் நடுவராக இருந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பி அவருடைய முகத்தில் கரியைப் பூசினார். அதற்கு “இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று கிறிஸ் ப்ராட் கூறியுள்ளார். முன்னதாக லாக்டவுன் காரணமாக 2022க்குப்பின் மீண்டும் உள்ளூர் நடுவர்களே சர்வதேச போட்டிகளில் நடுவர்களாக செயல்பட ஐசிசி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



