ரோஹித் சர்மா கேப்டன்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஐசிசி வெளியிட்ட 2024 டி20 கனவு அணி இதோ

Rohit Sharma
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நிறைவு பெற்ற 2024 காலண்டர் வருடத்தில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து ஐசிசி தங்களது கனவு அணியை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த வருடம் சர்வதேச டி20 போட்டிகளில் அசத்திய வீரர்களை வைத்து ஐசிசி தங்களது கனவு அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணிக்கு இந்தியாவின் ரோகித் சர்மா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்க வேண்டும் என்று அணுகுமுறையை பின்பற்றிய அவருடைய தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

4 இந்தியர்களுக்கு இடம்:

அதற்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோஹித் சர்மா துவக்க வீரராகவும் தேர்வாகியுள்ளார். அவருடன் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் மற்றொரு துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் பிலிப்ஸ் சால்ட் மற்றும் நான்காவது இடத்தில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

மிடில் ஆர்டரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்டடி வீரர் நிக்கோலஸ் பூரான் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல கடந்த வருடம் அசத்திய ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா ஸ்பின் ஆல் ரவுண்டராக தேர்வாகியுள்ளார். அவருடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கனவு அணி:

2024 டி20 உலகக் கோப்பையில் ஃபைனல் உட்பட ஆல் ரவுண்டராக அசத்திய அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அவர்களுடன் ஸ்பின்னர்களாக இலங்கையின் ஹசரங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ரசித் கனவு என்று கூறினார். வேகப்பந்து வீச்சாளராக சந்தேகமின்றி இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 42 முறை சாம்பியனை நொறுக்கிய ஜம்மு காஷ்மீர் வெற்றி.. ரோஹித் வந்த நேரத்தில் மும்பை 11 வருட பரிதாப சாதனை

2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவருடன் சேர்ந்து 17 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங்கும் இந்த அணியில் தேர்வாகியுள்ளார். 2024 ஐசிசி கனவு டி20 அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பில் சால்ட், பாபர் அசாம், நிக்கோலஸ் பூரான் (கீப்பர்), சிகந்தர் ராசா, ஹர்டிக் பாண்டியா, ரசித் கான், வணிந்து ஹஸரங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்

Advertisement