ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எனவே 2013க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் அந்தத் தொடரில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்கு தகுதியான தம்முடைய 11 பேர் கொண்ட அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ளார். இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நித்திஸ் ரெட்டி போன்றவர் இந்த அணியில் இருப்பது வித்தியாசத்தை ஏற்படுத்துமா? குல்தீப் யாதவ் விளையாடினால் நாம் 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும்”
இந்திய அணி:
“குல்தீப் முதன்மை ஸ்பின்னர் என்பதால் அவர் 9வது இடத்தில் விளையாட வேண்டும். அதே போல வாஷிங்டன் சுந்தர் ஈடுபடுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் கௌதம் கம்பீர் அவருடைய பேட்டிங்கை அதிகமாக மதிப்பிடுகிறார். எனவே அவரும் பேட்டிங் வரிசையில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. உலகக்கோப்பை வரிசையை பின்பற்றினால் நீங்கள் ஜடேஜா அல்லது அக்சர் படேலை ஆறாவது இடத்தில் விளையாட வைப்பீர்கள்”
“ஹர்திக் பாண்டியா 7, வாஷிங்டன் சுந்தர் 8வது இடத்தில் விளையாடுவார்கள். இது அணியில் நல்ல சமநிலையை கடைபிடிக்க உதவும். கூடவே ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமை கை கொடுக்கும். அதே சமயம் வாஷிங்டன் சுந்தர் ஏழாவது இடத்தில் விளையாடினால் அது நம்முடைய பேட்டிங் வரிசையை கொஞ்சம் பலவீனப்படுத்தும்”
அஸ்வின் லெவன்:
“எனவே அவர் எட்டாவது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும். ரோஹித் – சுப்மன் கில் துவக்க வீரர்களாக விளையாட வேண்டும். பின்னர் விராட் கோலி. கடந்த உலகக் கோப்பையில் திடமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்திலும் ராகுல் ஐந்தாவது இடத்திலும் விளையாட வேண்டும். அக்சர் படேல், ஜடேஜா ஆகியோர் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பச்சை கொடி காட்டிய விராட் கோலி.. 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் விராட் கோலி – விவரம் இதோ
2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான அஸ்வின் தேர்ந்தெடுத்த இந்திய பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா/அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா



