இவ்வளவு வற்புறுத்தி தான் செய்யனுமா? ஃபார்முக்கு திரும்ப அக்கறை இருந்தா நீங்களே விளையாடுங்க.. யுவ்ராஜ் அறிவுரை

Yuvraj Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர்கள் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடினார்கள். அவர்களுடைய சுமாரான ரன் குவிப்பால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.

அதில் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் 20 ரன்கள் கூட தாண்டாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் கடைசிப் போட்டியில் விளையாடாத அவர் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனை படைத்தார். மறுபுறம் விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

அக்கறை வேணாமா:

ஆனால் மற்ற போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்த அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் அவர்களை ஓய்வு பெறுமாறு சில இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் ஃபார்முக்கு திரும்ப ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது அவசியம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வளவு வற்புறுத்தலுக்கு முன்பாகவே ஃபார்முக்கு திரும்பும் அக்கறை இருந்தால் தாங்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளூரில் விளையாட வேண்டும் என்று யுவ்ராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக காயம் இல்லையெனில் உள்ளூரில் விளையாடுவது மட்டுமே ஃபார்முக்கு திரும்பும் ஒரே வழி என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

யுவ்ராஜ் அறிவுரை:

இது பற்றி யுவ்ராஜ் சிங் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட் முக்கியமானது. நீங்கள் நன்றாக விளையாடாத போது உங்களுக்கு நேரம் இருந்தால் கண்டிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் கருதுகிறேன். அதுவே நீங்கள் பயிற்சி செய்வதற்கும் போட்டி நேரத்தை பெறுவதற்கும் மிகவும் சிறந்த வழியாகும்”

இதையும் படிங்க: கோட்டக் சரியான கோச்.. ஆனா நியூஸ் எப்படி லீக் ஆகுது? தடுக்க பிசிசிஐ இதை செய்யனும்.. ஆகாஷ் சோப்ரா

“உங்களுக்கு நேரம் இருந்து நீங்கள் காயத்தை சந்திக்காமல் இருந்தால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். இப்படி பல முன்னாள் வீரர்களின் அறிவுறுத்தல் காரணமாக 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து விரைவில் ரஞ்சிக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாட உள்ளார். 2012க்குப்பின் விராட் கோலியும் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement