ரோஹித், கில்லை தொடர்ந்து 8 ஆண்டுக்கு பிறகு முக்கிய முடிவை கையிலெடுத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரினை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வரும் இந்திய அணியானது அதற்கு முன்னதாக இங்கிலாந்து தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ரிஷப் பண்ட் எடுத்துள்ள புதிய முடிவு :

இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டுக்கு இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

ஏனெனில் அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடி இருந்ததன் காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பு பணிச்சுமை காரணமாக மறுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய முக்கிய தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரை போன்று தானும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி 23-ஆம் தேதி துவங்கும் ரஞ்சி தொடரின் கடைசி கட்ட இரண்டு லீக் போட்டிகளில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக பங்கேற்று விளையாட இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடர் முடிந்த கையோடு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் முழு உடற்தகுதியுடன் இருக்கும் அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று கட்டளை விதித்திருந்தார்.

இதையும் படிங்க : திரும்ப வந்துட்டான்னு நினச்சேன்.. ஆனா கிரேட் விராட் கோலி இப்படி செய்வாருன்னு நினைக்கல.. பிரட் லீ ஏமாற்றம்

இவ்வேளையில் ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் ரஞ்சி போட்டிகளுக்கு திரும்பியிருந்தனர். அந்த வகையில் தற்போது ரிஷப் பண்ட்டும் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ரஞ்சி போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement