பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியானது நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூர்யா குமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு சில வீரர்கள் பேக்கப் வீரர்களாக அந்த தொடரில் இடம் பிடித்துள்ளனர்.
அந்த 3 பேரும் இடம்பெறாதது இதுக்காகத்தான் :
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இளம் வீரர்களாக இருந்தும் இந்த டி20 அணியில் இடம்பெறாமல் போனது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் தற்போது டி20 போட்டிகளில் தற்போது இளம் வீரர்களே விளையாடி வருவதாலும் இவர்களை தவிற்த்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்த கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் அதற்கான விடையும் தற்போது பிசிசிஐ சார்பில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ரிஷப் பண்ட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் அண்மையில் தான் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தனர்.
மேலும் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் இவர்கள் மூவரும் இடம்பெற இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு போதிய ஓய்வு தேவை என்று முடிவு செய்து பி.சி.சி.ஐ இந்த தேர்வில் அவர்களை உட்படுத்தவில்லை.
இதையும் படிங்க : தோனி அதுல மாஸ்டர் கேப்டன்.. ஜான்சனை நொறுக்கிய பயமற்றவர்.. யோக்ராஜ் சிங் திடீர் பாராட்டு
மேலும் அந்த மூவரும் தாங்களும் சற்று ஓய்வு தேவை என்று நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாலேயே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர்களை தேர்வு செய்யவில்லை என்றும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் மூவரும் இடம்பெற உள்ளதாகவும், அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



