திரும்பி அங்க போய்ட்டு வாங்க.. எல்லாம் சரியாகிடும்.. விராட் ரோஹித்துக்கு அட்வைஸ் கொடுத்த – ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் கடந்த 2024 ஆம் ஆண்டு அவர்களது பெரிய கரியரில் மிகப்பெரிய சரிவை சந்தித்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்கள்.

விராட் ரோஹித்துக்கு அறிவுரை வழங்கிய ரவி சாஸ்திரி :

இதன் காரணமாக அவர்கள் இருவரது பேட்டிங் ஃபார்ம் மீது மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதோடு அவர்கள் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற பல்வேறு பேச்சுக்களும் இருந்து வருகின்றது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் பார்மை மீட்டெடுக்க சில அறிவுரைகளை முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி வழங்கி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் டொமஸ்டிக் கிரிக்கெட்டிற்கு செல்ல வேண்டும்.

அங்கு சென்று விளையாடும் பட்சத்தில் அவர்களால் இழந்த பார்மை மீட்டெடுக்க முடியும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாட்கள் விளையாடக்கூடிய போட்டி. எனவே அந்த வகையாக போட்டிகளில் பொறுமை என்பது மிக அவசியம். தற்போதுள்ள சூழலில் அவர்கள் மிகச் சிறப்பாக வீரர்களாக இருந்தாலும் உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும்.

- Advertisement -

அப்படி அவர்கள் விளையாடும் பட்சத்தில் இளம் வீரர்கள் பலருடன் பங்கேற்று அவர்களுக்கு போட்டியாக இவர்கள் விளையாடும் போது நிச்சயம் அவர்கள் இழந்த பார்மினை மீட்டெடுக்க முடியும். ரோஹித் சர்மா கடைசியாக 2016-ஆம் ஆண்டும், விராட் கோலி கடைசியாக 2012-ஆம் ஆண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினர்.

இதையும் படிங்க : சொதப்புனா என்ன பிரச்சனை இல்ல.. ரோஹித் மற்றும் விராட் விடயத்தில் நிர்வாகம் எடுத்துள்ள – முக்கிய முடிவு

எனவே அவர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி உள்ளூர் கிரிக்கெட்டில் இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் மீண்டும் உள்ளூர் போட்டிகளுக்கு சென்று விளையாடினால் நிச்சயம் பல்வேறு வீரர்களை எதிர்த்து விளையாடும் அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். அப்படி விளையாடும் பட்சத்தில் அவர்களால் இழந்த பார்மை மீட்டெடுக்க முடியும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Advertisement