பும்ரா இல்லனா 5 – 0ன்னு தோத்துருப்போம்.. இதை செய்யலன்னா ரோஹித், கோலி இங்கிலாந்துக்கு வேணாம்.. ஹர்பஜன் சிங்

Harbhajan Singh
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா கோட்டை விட்டது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது. இந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

அதன் காரணமாக ஐந்து போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து போராடிய பும்ராவின் போராட்டமும் வீணானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் பும்ரா மட்டும் விளையாடாமல் போயிருந்தால் இத்தொடரில் இந்நேரம் 5 – 0 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்திருக்கும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஏமாற்றத்தையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கோலி, ரோஹித் வேணாம்:

அடுத்ததாக கவுண்டி உள்ளூர் தொடரில் விளையாடாமல் போனால் வரும் ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்தியாவுக்கு தேவையில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். அவர்கள் தங்களை சூப்பர்ஸ்டார்களாக நினைத்துக்கொண்டு உள்ளூரில் விளையாடாததே இப்படி தடுமாற காரணம் என ஹர்பஜன் கூறியுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “விராட் அல்லது ரோஹித் உட்பட யாராக இருந்தாலும் இந்திய அணிக்கான தேர்வு செயல்பாடுகள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்”

“இங்கே இந்திய அணியையும் கிரிக்கெட்டையும் விட பெரிய வீரர் யாரும் கிடையாது. ஒருவேளை அவர்கள் தங்களை சூப்பர்ஸ்டார் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் பிரச்சனை இல்லை. அடுத்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக நமது சீனியர்கள் கவுன்டி தொடரில் விளையாட வேண்டும். அதை செய்தால் மட்டுமே அவர்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லுங்கள்”

- Advertisement -

பும்ரா இல்லனா:

“இந்திய அணியின் தேர்வு எப்படி நடக்கிறது? சிட்னியில் வேகத்துக்கு சாதகமான மைதானத்தில் ஏன் 2 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். உங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேட்டிங் தெரிந்திருந்தால் விளையாட வேண்டும் என்று அர்த்தமில்லை. அங்கே ஒரு வேகப்பந்து வீச்சாளர் எக்ஸ்ட்ராவாக விளையாடியிருந்தால் போட்டியில் வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். இது டி20 கிடையாது. டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானது”

இதையும் படிங்க: டிராவிட் மாதிரி இல்ல.. கம்பீர் வந்த 6 மாசத்தில் இந்தியாவுக்கு 3 அவமானம்.. ஸ்டார்ஸ் வேணாம்.. ஹர்பஜன் விமர்சனம்

“ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா இந்த சுற்றுப்பயணத்தில் இல்லாமல் போயிருந்தால் நாம் 5 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்திருப்போம். அவர் நம்மை முதல் போட்டியிலேயே காப்பாற்றினார். அதற்கடுத்த போட்டிகளிலும் அவர் இந்தியாவை காப்பாற்றினார். எனவே பும்ரா இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா 5 – 0 அல்லது 4 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement