கோலி – ரோஹித் மோதலுக்கு குடும்பம் தான் காரணமாம். ரோஹித் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Rohith-1
- Advertisement -

இந்திய அணியில் ஒரு சில மூத்த வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிநாட்டு பயணங்களுக்கு உடன் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த வகையில் கோலி, ரோஹித், தோனி மற்றும் தவான் போன்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டு பயணங்களில் எப்போதும் கலந்து கொள்வார்கள். வெளிநாட்டு மைதானங்களில் இவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் மைதானத்தில் நாம் அடிக்கடி பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

rohith

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பையில் இது போன்று நடக்க கூடாது என்று பிசிசிஐ எச்சரித்தது. ஆனால் அதனையும் மீறி ஒரு சில கட்டுப்பாடுகளை மீறி ரோகித் தொடர் முழுவதும் தனது மனைவி மற்றும் குழந்தையை வெளிநாட்டு பயணத்தின் போது உலக கோப்பை தொடரில் வைத்திருந்தார். இந்த விடயம் குறித்து கோலி ரோகித் இடம் விசாரிக்கவே கோலி ரோகித் இடையே பிளவு ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் உலக கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி நாடு திரும்பும் போதும் கூட ரோகித் முன்னதாக தனது மனைவியுடன் தனியாக இந்தியா திரும்பினார். இந்த விடயமும் தற்போது அவர்கள் இருவருக்கும் இடையான பிரச்சினையை வெளிக்காட்டியுள்ளது. பிசிசிஐ உலக கோப்பை தொடருக்கு முன்னதாக குடும்பங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ritika 1

ஆனால் அதனையும் ரோகித் மீறி தொடர் முழுவதும் தன் குடும்பத்தை இங்கிலாந்தில் வைத்து இருந்ததால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. மற்றபடி தவான் கோலி, தோனி ஆகியோர் பிசிசிஐ கட்டுப்பாட்டில் தங்களது குடும்பத்தினரை வெளிநாட்டு பயணங்களில் சரியாக வழிநடத்தி வருகின்றனர் என்பதும் தற்போது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement