ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா 2 தோல்வியை ஒரு டிரா பதிவு செய்தது.
அதனால் 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டுள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது. அந்த தோல்விகளுக்கு கேப்டனாக சுமாராக செயல்பட்ட ரோஹித் சர்மா பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்காமல் முக்கிய காரணமாக அமைந்தார்.
விலகும் ரோஹித்:
அதன் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ரோகித் சர்மா அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளவும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் எஞ்சிய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் 5வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
மறுபுறம் கடந்த 3 போட்டிகளில் 6.2 என்ற படுமோசமான சராசரியில் பேட்டிங் செய்த ரோகித் மோசமான ஃபார்மில் உள்ளார். எனவே இந்திய அணியின் நல்லனுக்காக 5வது போட்டியில் தம்மைத் தாமே ரோகித் விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் இது பற்றி ரோஹிர் சர்மா நேரடியாக கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
கேப்டனாக பும்ரா:
மேலும் பும்ராவிடம் சிட்னி மைதானத்தில் கௌதம் கம்பீர் 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது துணை கேப்டனான பும்ரா 5வது போட்டியில் இந்தியாவை மீண்டும் தலைமை தாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அப்படி ரோஹித் விலகுவதால் சுப்மன் கில் மீண்டும் ஐந்தாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற உள்ளார்.
இதையும் படிங்க: ஓய்வு பெற சரியான நேரம்.. ரோஹித் கடைசி மேட்ச்லயாவது இதை செய்யனும்.. சாஸ்திரி அட்வைஸ்
அதே போல ஜெயஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக மீண்டும் களமிறங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் ரோகித் சர்மா இந்த தொடர் முடிந்ததும் ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது. 4வது போட்டியே அவருடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும் போது இவை அனைத்தும் உறுதி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.



