டிராவாக வேண்டிய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் – விவரம் இதோ

IND-vs-AUS
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் சிக்கலாக்கி கொண்டது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது 369 ரன்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் :

பின்னர் 105 ரன்கள் முன்னிலையிலுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 234 ரன்கள் குவிக்க 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி எப்படியும் போட்டியை டிரா செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி 350 ரன்களில் தடுத்திருக்க வேண்டும் ஆனால் பும்ரா தவிர மற்ற அனைவரும் விக்கெட் எடுக்க தடுமாறியதால் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது. அதேபோன்று முதல் இன்னிங்ஸில் நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்த வேளையில் ஜடேஜா மற்றும் பண்ட் ஆகியோர் ஒரு 50 ரன்கள் சேர்த்து இருந்தால் கூட இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை நெருங்கியிருக்கும்.

அதேபோன்று கடந்த மூன்று போட்டிகளாக துவக்க வீரராக களமிறங்கியா கே.எல் ராகுலை இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறக்கியதும் ஒரு தவறான முடிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி டிராவாக வேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க முக்கியமான காரணம் யாதெனில் :

- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக மிடில் ஆர்டர் வரிசையில் யாருமே பெரிய அளவில் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரன் குவிப்பை வழங்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் கூட அதிக பந்துகளை எதிர்கொண்ட வேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெகு குறைவான பந்துகளை சந்தித்து ஆட்டம் இழந்தனர். இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்சிலும் அற்புதமாக விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் அவுட்டே இல்லை.. 2 காரணம் இது தான்.. இந்தியாவை நல்லா செஞ்சுட்டீங்க.. கவாஸ்கர் விளாசல்

அதேபோன்று நிதீஷ்குமார் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தார். அவர்களை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் பந்துகளை எதிர்கொண்டு விளையாடாததும் மோசமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு ஒரு கட்டத்தில் தேநீர் இடைவேளைக்கு பிறகு மூன்றாவது செசனில் ஏழு விக்கெட்டுகளை கொத்தாக இழந்ததே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement