மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்தாலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், ஜடேஜா, பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
அதனால் 221-7 என தடுமாறிய இந்திய அணியை நிதிஷ் ரெட்டி – வாசிங்டன் சுந்தர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள். அதில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்தும் நித்திஷ் ரெட்டி சதத்தை அடித்து 105* ரன்களுடன் உள்ளார்கள்.
300 பந்துகள்:
அதனால் 3வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா போராடி வெல்லுமா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் 8, 9வது இடத்தில் களமிறங்கிய நிதிஷ் 176, சுந்தர் 162 என இருவரும் சேர்ந்து 300க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்டதாக இர்பான் பதான் பாராட்டியுள்ளார். அது வரலாற்றில் நடைபெறாத ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே பெரிய விஷயம் என்னவெனில் 8, 9வது இடங்களில் களமிறங்கிய நம்முடைய பேட்ஸ்மேன்கள் 300க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்டுள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டில் இதற்கு முன் நடைபெறாத விஷயமாகும். இந்த புத்திசாலித்தனமான பார்ட்னர்ஷிப் தான் இன்னும் இத்தொடரில் இந்தியா உயிருடன் இருக்க காரணம். ஒருவேளை அவர்கள் 300 பந்துகளை எதிர்கொள்ளாமல் விட்டிருந்தால் ஆஸ்திரேலியா இந்நேரம் டாமினேட் செய்திருக்கும்”
பாதுகாப்பான கையில்:
“4வது நாளிலேயே ஆஸ்திரேலியா எப்படி வெற்றி பெறப்போகிறது என்பதை பற்றி இப்போது பேசிக் கொண்டிருப்போம். ஆனால் இந்த 2 வீரர்களும் அந்த நிலைமையை மாற்றியுள்ளார்கள்” என்று பாராட்டினார். இது பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “நிதிஷ் குமார் – சுந்தர் ஆகிய இருவருமே டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள். சொல்லப்போனால் நிதிஷ் குமாரை அவருடைய ஐபிஎல் அணி தக்க வைத்துள்ளது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான பசி அவரிடம் இருக்கிறது”
இதையும் படிங்க: ரசிகர்கள் தான் பரிசு.. நிதிஷ்கிட்ட இதான் சொன்னேன்.. என் ஆட்டத்துக்கு அவர் 2 பேர் முக்கிய காரணம்.. சுந்தர் பேட்டி
“இன்று இடைவெளிக்கு பின் அவர் 16 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் நாம் விக்கெட்டை விடக்கூடாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. அந்த சூழ்நிலையில் பந்தை அவர் அடிக்காமல் தவற விட்ட விதத்தில் நவீன வீரர்களிடமும் பொறுமை இருப்பதை பார்த்தேன். அதனால் இந்திய அணி பாதுகாப்பான கைகளில் இருப்பதாக உணர்கிறேன். பார்ப்பதற்கு பழையது போல் தெரியும் டெஸ்ட் போட்டிகளில் புதிய வீரர்களிடம் அசத்துவதற்கான ஏக்கம் இருக்கிறது” எனக் கூறினார்.



