இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் பாக்சிங் டே போட்டியாக துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது மெல்போர்ன் நகருக்கு சென்றடைந்து தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகாஷ் தீப்புக்கு பதிலடி கொடுத்த கிளார்க் :
நாளைய இந்த நான்காவது போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஆகாஷ் தீப் : டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை வைத்துள்ளோம் என்றும் ஷார்ட் பிட்ச் பந்துகளின் மூலம் அவருக்கு பிரச்சனை கொடுத்து அவரை வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதோடு முந்தைய போட்டிகளை போன்று அவரை அதிக ரன்கள் எடுக்க விடாமல் வீழ்த்தும் திட்டத்தோடு நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் என்று பேசியிருந்தார்.
ஆகாஷ் தீப் இப்படி டிராவிஸ் ஹெட்டை விரைவில் வீழ்த்துவோம் என்று கூறியிருந்த வேளையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கல் கிளார்க் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு வந்து இப்படி சொல்வதை நான் பொருட்படுத்தவில்லை.
அவர் கூறிய வார்த்தைகளை டிராவிஸ் ஹெட் மனதில் வைத்திருக்க நிச்சயம் விரும்புவார். டிராவிஸ் ஹெட் ஒரு ஸ்மார்ட் கிரிக்கெட்டர். அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது முழுமையாக தெரியும். பழைய பந்துகளை அவர் முழுவதுமாக பயன்படுத்தி ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : 500 விக்கெட்ஸ் 6 சதம்.. யோசிக்காம செய்ய மாட்டாரு.. இதெல்லாம் ஈஸி கிடையாது.. அஸ்வினை வாழ்த்திய ரங்கனா ஹெராத்
இந்திய அணி வீரர்கள் அவரை வீழ்த்த வேண்டுமெனில் 10, 20 அல்லது 40 பந்துகளுக்குள் வீழ்த்த வேண்டும். இல்லையெனில் அவர் 40-50 ரன்கள் தொட்டுவிட்டால் நிச்சயம் பெரிய சதங்களை எவ்வாறு அடிக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்று ஆகாஷ் தீப்பின் கருத்திற்கு மைக்கல் கிளார்க் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



