“பாக்சிங் டே” போட்டியை எந்த சேனலில் பாக்கலாம்.. இந்திய நேரப்படி போட்டி எப்போது நடைபெறும் – விவரம் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ் நாளுக்கு அடுத்த நாளான பாக்சிங் டே அன்று நடைபெறும் இந்த போட்டி உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பாக்சிங் டே” போட்டி எப்போது துவங்கும் :

இந்நிலையில் இந்த போட்டி எந்த நேரத்தில் நடைபெறும்? எந்த சேனலில் போட்டியை பாக்கலாம்? என்பது குறித்த முழு தகவலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால் பெரிய கட்டாயத்துடன் இந்திய அணி இந்த போட்டியில் விளையாட இருக்கிறது.

அதேபோன்று ஏற்கனவே மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 10 போட்டியில் ஒரு தோல்வியை மட்டுமே பெற்றுள்ளதால் நிச்சயம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு அதிகாலை 5 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

முதல் செஷன் 7 மணி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு 40 நிமிடம் உணவு இடைவேளை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் 7:40-க்கு போட்டிகள் ஆரம்பித்து 9:40 வரை இரண்டாவது செஷனும் அதன் பின்னர் 20 நிமிடம் தேநீர் இடைவேளை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் 10:00 மணிக்கு போட்டி துவங்கி மதியம் 12 மணி வரை மூன்றாவது செஷன் நடைபெற்று முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஸ்டீவ் ஸ்மித் செய்ஞ்ச அந்த விஷயத்தை பாலோ பண்ணா விராட் கோலி கலக்குவாரு – ரவி சாஸ்திரி அட்வைஸ்

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக கண்டுகளிக்கலாம். அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த போட்டியை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement