இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பல முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய வாழ்க்கைத் தெரிவித்தார்.
அதைப் பார்த்த சில ரசிகர்கள் எப்போதும் போல் ஒரே மாதிரியாக இல்லாமல் ஏன் இப்படி பொய்யாக வாழ்த்துகிறீர்கள்? என்ற வகையில் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். ஏனெனில் 2010 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்ல உதவிய அஸ்வினுக்கு அப்போதைய கேப்டன் தோனி இந்திய அணியிலும் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் அசத்தத் துவங்கியதால் 2011 உலகக் கோப்பைக்குப் பின் ஹர்பஜனை கழற்றி விட்ட அவர் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தார்.
சண்டை இல்லங்க:
அதை இறுக்கமாகப் பிடித்த அஸ்வின் இன்று ஹர்பஜனையே முந்தி ஜாம்பவானாகவும் ஓய்வு பெற்றுள்ளார். மறுபுறம் அதன் காரணமாக அஸ்வினை சமீப காலங்களில் வர்ணனையாளராக மாறிய பின் ஹர்பஜன் சிங் சில நேரங்களில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினுக்கும் தமக்கும் சண்டை என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் காணப்படுவதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது உண்மையில்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு தேவையான அளவுக்கு மட்டுமே சமூக ஊடகங்களைப் படிக்கிறேன். எனக்கும் அஸ்வினுக்கும் இடையே மோதல், சண்டை, சச்சரவு அல்லது கருத்து வேறுபாடு இருந்தால் நான் தான் அவரிடம் சென்று என்ன பிரச்சனை என்று முதலில் கேட்பேன்”
என்னோட தம்பி மாதிரி:
“ஆனால் அப்படி எதுவுமே இல்லை. அப்படி எதுவும் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அஸ்வினுக்கு என்ன விதி இருக்கிறதோ அதை பெறுவார். எனக்கு என்ன விதி இருக்கிறதோ அதை நான் பெறுவேன். இந்தியாவுக்காக அஸ்வின் சிறந்த பவுலராக இருக்கிறார். அவருடைய சாதனைகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அவருடன் எனக்கு பிரச்சனை என்று ட்விட்டரில் மக்கள் மாற்றி எழுதினால் அது அவர்களுடைய கருத்தாகும்”
இதையும் படிங்க: 2014இல் ஏபிடி முறைச்சாரு.. பும்ரா பெரியாளா வருவார்ன்னு நினைக்கல.. ஸ்லெட்ஜிங்கால் மாறியது பற்றி ஹசி
“இந்தியாவில் இரண்டரை நாட்களில் போட்டி முடியும் அளவுக்கு பிட்ச் இருப்பதைப் பற்றியே நான் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தேன். அதை வைத்து சமூக ஊடகங்களில் அஸ்வினுடன் எனக்கு பிரச்சனை இருப்பதாக நிறைய சத்தங்கள் காணப்படுகின்றன. உண்மையில் எந்த வீரர்களுடனும் எனக்கு பிரச்சனை இல்லை. அவர்களை மதிக்கிறேன். ஏனெனில் நாட்டுக்காக விளையாடுவது எளிதல்ல. அவர்கள் அனைவரும் எனது சக வீரர்கள். அவர்கள் எனது மூத்த அல்லது இளைய சகோதரர்கள்” என்று கூறினார்.



