2 ஏமாற்றம்.. கிரேட் அஸ்வினை இந்திய அணி வலுக்கட்டாயமா ரிட்டையராக வெச்சுட்டாங்க.. எரப்பள்ளி பிரசன்னா

E Prasanna
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார். நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரின் 3வது போட்டியில் அவர் திடீரென ஓய்வை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2010 முதல் விளையாடிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்று அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். அதனால் இன்னும் சில வருடங்கள் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுப்பதில்லை. அதனால் வருங்கால வீரங்களுக்கு வழி விட்டு அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அஸ்வினுக்கு ஆதரவில்லை:

இந்நிலையில் 14 வருடங்கள் விளையாடி இவ்வளவு சாதனைகளை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்தும் அஸ்வினுக்கு இந்திய அணி போதுமான ஆதரவும் வெளிநாடுகளில் வாய்ப்பும் கொடுக்கவில்லை என்று ஜாம்பவான் எரப்பள்ளி பிரசன்னா தெரிவித்துள்ளார். அந்த 2 ஏமாற்றமே அஸ்வினை வலுக்கட்டாயமாக ஓய்வை அறிவிக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி 84 வயதாகும் முன்னாள் இந்திய ஜாம்பவான் ஸ்பின்னரான பிரசன்னா அவர்கள் பேசியது பின்வருமாறு.

“அவருடைய ஓய்வு முடிவு எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. இனிமேலும் அணியின் திட்டங்களில் நீங்கள் இல்லை என்ற அறிகுறியை அஸ்வின் இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து பெற்றிருக்கலாம். அது அவரை வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்திருக்கலாம். தற்போதைய ஆஸ்திரேலிய தொடர் உட்பட வெளிநாடுகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை”

- Advertisement -

விடைபெற்ற அஸ்வின்:

“அது அவருடைய ஓய்வு முடிவில் முக்கிய பங்காற்றியிருக்கலாம். எப்படி இருந்தாலும் அஸ்வின் இந்த தலைமுறையின் கிரேட் ஸ்பின்னர் என்று நான் சொல்வேன். அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் சிறந்த சாதனைகளையும் கொண்டுள்ளார். நேதன் லயனுடன் அவரும் இந்த தலைமுறையின் கடைசி கிளாசிக்கல் ஸ்பின்னர்”

இதையும் படிங்க: ஸ்டம்பையா எட்டி உதைக்குற? ஹென்றிச் கிளாசனுக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய ஐ.சி.சி – விவரம் இதோ

“அவரிடம் உள்ள தரத்திற்கு அடுத்ததாக இளம் வீரர்களுக்கு தன்னுடைய அறிவை பயிற்சியாக கொடுக்கலாம். வருங்காலங்களில் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராகவும் செயல்படலாம்” என்று கூறினார். இதை அடுத்து ஐபிஎல் தொடரில் தம்முடைய கேரியர் துவங்கிய சிஎஸ்கே அணிக்காக மீண்டும் அடுத்த வருடம் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement