அந்த தைரியம் இல்லாததால் தான் அப்படி செஞ்சாங்க போல.. இந்திய அணியை கலாய்த்த நேதன் லயன்

Nathan Lyon
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணியை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்திய நிலையில் மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து மெல்போர்ன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் நான்காவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது.

முன்னதாக காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு விராட் கோலி, கேப்டன் ரோஹித் முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதே போல கேஎல் ராகுல் 84, ஜடேஜா 77 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள்.

- Advertisement -

கொண்டாடிய இந்தியா:

அதையும் தாண்டி கடைசி விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்தால் மட்டுமே ஃபாலோ ஆன் தவிர்க்க முடியும் என்ற சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. அப்போது தில்லாக பேட்டிங் செய்த ஆகாஷ் தீப் 31 மற்றும் ஜஸ்பிரித் பும்ரா 10* ரன்கள் எடுத்து இந்தியாவை ஃபாலோ ஆன் மற்றும் இன்னிங்ஸ் தோல்வியை பெறும் அவமானத்திலிருந்து காப்பாற்றினர். குறிப்பாக கமின்ஸ்க்கு எதிராக ஆகாஷ் தீப் பவுண்டரி அடித்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவினார்.

அப்போது பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் வெற்றி கிடைத்தது போல் அந்த தருணத்தை கைதட்டி வெறித்தனமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் காபாவில் 5வது நாளில் தங்களுடைய பவுலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள விரும்பாததாலேயே சாதாரண ஃபாலோ ஆன் தவிர்த்ததை அப்படி கொண்டாடியிருக்கலாம் என்று ஆஸ்திரேலியாவில் நேதன் லயன் மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

- Advertisement -

கலாய்த்த லயன்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் ரியாக்சன் எங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அதைப்பற்றி எங்கள் அணியில் சில வீரர்கள் பேசினோம். ஏனெனில் நாங்கள் நன்றாக விளையாடி நல்ல நிலைக்கு வந்தோம். ஃபாலோ ஆன் கொடுக்க முடியாதது விரக்தியை கொடுக்கிறது. ஆனாலும் நாங்கள் 185 ரன்கள் முன்னிலையில் இருந்தோம்”

இதையும் படிங்க: எதிர்காலத்தில் நிச்சயமாக அஷ்வின் அந்த பதவிகளை அடைவார்.. அவர் செம டேலன்ட் – ரஷீத் லத்தீப் வாழ்த்து

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போதும் நம்மால் இந்தப் போட்டியை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இந்தியா இருக்கிறது என்பதை அவர்களது கொண்டாட்டம் காண்பித்தது. அதே சமயம் ஒருவேளை நாங்கள் ஃபாலோ ஆன் கொடுத்தால் எங்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் பேட்டிங் செய்ய விரும்பவில்லை என்பதையும் அது காண்பித்தது” என்று கூறினார்.

Advertisement