ஜஸ்ப்ரித் பும்ரா வலது கை வாசிம் அக்ரம்.. இது ஆகலன்னா ஆஸி ஜெயிப்பது கஷ்டம்.. லாங்கர் பாராட்டு

Justin Langer
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. 3வது போட்டி மழையால் டிராவில் முடிந்தது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்த தொடரின் 4வது போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 21* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் மொத்தமாக 10 போட்டிகளில் அவர் 52* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

வலது கை வாசிம் அக்ரம்:

மேலும் சிராஜ் உள்ளிட்ட இதர பவுலர்கள் தடுமாறும் நிலையில் இத்தொடரில் தனி ஒருவனாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார் என்று சொல்லலாம். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா வலது கை வாசிம் அக்ரம் என்று ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார். ஒருவேளை இத்தொடரில் அவர் காயமடையாமல் தொடர்ந்து விளையாடினால் ஆஸ்திரேலியா வெல்வது கடினம் என்றும் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவை எதிர்கொள்வதை நான் வெறுப்பேன். அவர் வாசிம் அக்ரம் போன்றவர். என்னைப் பொறுத்த வரை அவர் வாசிம் அக்ரம் வலது கை வெர்சன். ஒவ்வொரு முறையும் நீங்கள் எதிர்கொண்ட சிறந்த பவுலர் யார் என்று என்னிடம் கேட்டால் நான் வாசிம் அக்ரம் என்று சொன்னேன். நல்ல வேகத்தைக் கொண்டுள்ள அவர்கள் சிறந்த பவுலர்கள்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சவால்:

“ஒவ்வொரு முறையும் ஒரே இடத்தில் சரியான பவுன்சர் பந்துகளை வீசுவார்கள். எனவே அவர்களை எதிர்கொள்வது நைட்மேராக (பயமாக) இருக்கும். ஜஸ்ப்ரித் பும்ரா பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமையைக் கொண்டுள்ளார். அவருடைய சீம் கச்சிதமாக இருக்கிறது. நீங்கள் சீம் பகுதியை கச்சிதமாக செயல்படுத்தினால் பந்து உங்களுடைய கைகளில் இருந்து வெளியே வந்து ஸ்விங் ஆகி எந்தப் பக்கமும் செல்லலாம்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கு அஸ்வின் முள்ளாக இருந்தாரு.. இதுவே அவரோட தரத்தை பேசும்.. ஸ்டார்க் பாராட்டு

“அதைத்தான் வாசிம் அக்ரம் செய்வார். அவரை எதிர்கொள்வது பயமாக இருக்கும். அதே போல பும்ராவை எதிர்கொள்வதை நான் வெறுப்பேன். நல்ல வேகத்தைக் கொண்டுள்ள அவர் சிறந்த போட்டியாளர். ஒருவேளை அவர் ஃபிட்டாக இருந்தால் இந்த கோடைகாலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொன்னேன். ஒருவேளை அவர் ஃபிட்டாக இல்லையெனில் ஆஸ்திரேலிய எளிதாக வெல்லும்” என்று கூறினார்.

Advertisement