ஹெட்டை முடித்த கோலியின் மாஸ்டர் பிளான்.. வேடிக்கை பார்த்த ரோஹித்.. பேசாம இவரே கேப்டனா இருக்கலாம்

Virat Kohli 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து அசத்தி வருவதை அனைவரும் அறிவோம். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்த அவர் இந்தியாவை தோற்கடித்தார். அதே போல நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 2, 3வது போட்டிகளில் சதமடித்த அவர் இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்றார்.

அவரை அவுட்டாக்க முடியாமல் ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பை ஃபைனல் முதலில் திணறி வருகிறார் என்று சொல்லலாம். அந்த சூழ்நிலையில் காபாவில் நடைபெற்ற 3வது போட்டியில் டிராவிஸ் ஹெட் மீண்டும் அதிரடியாக விளையாடினார். அப்போது முகமது சிராஜிடம் கேப்டன் ரோஹித் “ஓவர் தி விக்கெட் திசையில் வீசினால் அவர் எளிதாக அடிப்பார் என்பதால் அதை செய்யாதீர்கள்” என்று சொன்னார்.

- Advertisement -

கோலியின் மாஸ்டர்பிளான்:

ஆனால் அருகில் நின்ற விராட் கோலி. “இல்லை இல்லை சிராஜ் அப்படியே வீசட்டும். அங்கே ஸ்க்ரெம்பல் சீம் பந்தை வீசினால் அவர் அவுட்டாக அதிக வாய்ப்புள்ளது. ஸ்கொயர் லெக் ஃபீல்டரை கொஞ்சம் உள்ளே நிறுத்தி மிடில் ஸ்டம்ப் ஸ்டம்ப்பை குறி வைத்து வீசினால் விக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று சொன்னார்.

மறுபுறம் ஹெட்டுக்கு எதிராக இதுவரை தம்மால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்பதால் விராட் கோலி சொன்ன திட்டத்தை சிராஜ் செயல்படுத்த ரோகித் சர்மாவும் வேடிக்கை மட்டும் பார்த்து அமைதியாக சரி சொன்னார். அதனால் விராட் கோலி சொன்னது போலவே சிராஜ் வீசினார். அடுத்த பந்திலேயே டிராவிஸ் ஹெட் டாப் எட்ஜ் கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

கேப்டன் கோலி:

அதே போல ஸ்டீவ் ஸ்மித் மற்றொரு தருணத்தில் சிராஜுக்கு எதிராக இறங்கி வந்த பவுண்டரி அடித்தார். அதைப் பார்த்த விராட் கோலி லெக் சைடு திசையில் வீசுமாறு சிராஜ்க்கு ஆலோசனை கொடுத்தார். அதே போல வீசிய சிராஜுக்கு எதிராக எட்ஜ் கொடுத்து ஸ்மித் அடுத்த பந்திலேயே வெளியேறினார். அதைப் பார்த்த ரசிகர்கள் பேசாமல் விராட் கோலியே இத்தொடரில் கேப்டனாக இருக்கலாம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: சச்சினுக்கு நிகரான அஸ்வினை.. நானா இருந்தா இந்த மரியாதை கொடுக்காம விட்ருக்க மாட்டேன்.. கபில் தேவ்

ஏனெனில் 2018 – 19 சீசனில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது. மேலும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் இந்தியா அற்புதமான வெற்றிகளை பெற்றது. அந்தளவுக்கு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக கேப்டன்ஷிப் செய்யக்கூடியவர். அதனாலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement