இப்படி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? – ஓர் அலசல்

Ashwin
- Advertisement -

தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அங்கு பயணித்துள்ள வேளையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியின் முடிவில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக திடீரென ஒரு அதிரடியான அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் வருத்தம் அடைய செய்துள்ளார்.

தொடரின் இடையே ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? :

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்திருக்கும் வேளையில் தற்போது அவர் திடீரென ஓய்வை அறிவித்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஒருவேளை இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றிருந்தால் கூட அது சற்று ஏற்றுக்கொள்ளும் விடயமாக இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரானது முழுவதுமாக முடிவுக்கு வராமலேயே இப்படி இடையில் அவர் ஓய்வை அறிவித்தது ஏன்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

அந்த வகையில் இந்த ஆஸ்திரேலிய சுற்றுபயணத்திற்கு முன்பாகவே இதுதான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்று ஏற்கனவே அஸ்வின் அவர்களது குடும்பத்தினரும் கூறிவிட்டு சென்றாராம். மேலும் ஆஸ்திரேலிய தொடரின் போது முக்கிய முடிவை எடுக்க உள்ளதாகவும் அவர் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தாராம்.

- Advertisement -

பெர்த் டெஸ்ட் போட்டி முடிவடைந்த போதே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து அஸ்வின் பேசியிருந்தார். ஆனாலும் ரோகித் சர்மா தான் அவரை சமாதானப்படுத்தி இரண்டாவது போட்டியில் விளையாட வைத்திருந்தார். இரண்டாவது போட்டி முடிந்த கையோடு மூன்றாவது போட்டியில் அவரை தேர்வு செய்யவில்லை என்று தெரிந்ததும் அணியின் சக வீரர்களை அழைத்து தன்னுடைய முடிவை அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : அஸ்வின் கேரியரை முடித்தாரா கம்பீர்? ரோஹித் பேட்டியில் தெளிவான உண்மை.. ஃபேர்வெல் கொடுத்திருக்கலாமே?

இதில் யாருடைய அழுத்தமும் அவரது ஓய்வுக்கு காரணம் கிடையாது. 38 வயதான அவர் முட்டியில் ஏற்கனவே ஏற்பட்ட காயம் காரணமாகவும், அடுத்த தலைமுறையை நோக்கி இந்திய அணி நகர வேண்டும் என்று உணர்ந்ததன் காரணமாகவே இந்த முடிவை அஸ்வின் எடுத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement