இந்திய அணி காப்பாற்றுவாரா வருண பகவான்.. கடைசி 2 நாட்களுக்கான வானிலை அறிக்கை – சொல்வது என்ன?

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள வேளையில் ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்துள்ள வேளையில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி வருகிறது.

வருண பகவான் காப்பாற்றுவாரா? :

தற்போதைய நிலையில் 394 ரன்கள் பின்தங்கி இருக்கும் இந்திய அணியானது நாளை நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதேபோல் இந்திய அணி விளையாடும் பட்சத்தில் நிச்சயம் இந்த மூன்றாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்து மிக மோசமான நிலையை எட்ட கூடும்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியிருந்தால் இந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கும். இந்நிலையில் இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியின் தோல்வியிலிருந்து தப்பிக்க வருண பகவான் வழி காட்டினால் மட்டுமே உண்டு என்ற நிலை ஆகிவிட்டது.

ஏனெனில் இந்த போட்டியின் முதல் மூன்று நாட்களில் ஏற்கனவே மழையின் தாக்கம் அதிகமாக இருந்த வேளையில் கடைசி இரண்டு நாட்களில் மழை எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த வானிலை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியில் நான்காம் நாளான அன்று அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று போட்டி நடைபெறும் நான்காம் நாளன்று மதிய நேரத்திலும், மாலை நேரத்திலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாம் நாளான புதன்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும், மதிய நேரத்திற்கு பிறகு 4,5 மணிக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் அந்த டெக்னிக்கை டெஸ்டிலும் யூஸ் பண்ணுங்க.. ரோஹித்துக்கு – ஹெய்டன் அட்வைஸ்

இப்படி வெளியான வானிலை அறிக்கையின் படி போட்டியின் பாதி நேரம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. வானிலை அறிக்கை கூறுவது போலவே மழை நிச்சயம் பெய்தால் இந்திய அணி தோல்வியை தவிர்க்கலாம். இல்லையெனில் நிச்சயம் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement