தம்பி இது பிராக்டீஸ் இல்ல.. 5 நிமிடம் 2 பந்தில் ஸ்டார்க் வலையில் விழுந்த ஜெய்ஸ்வால் கலாய்த்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா திண்டாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி துவங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடும் இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, கில் 1, கோலி 3, ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 51-4 என திணறும் இந்தியாவுக்கு களத்தில் ராகுல் 33*, கேப்டன் ரோஹித் 0* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

சிக்கிய ஜெய்ஸ்வால்:

தற்போது ஆஸ்திரேலியாவை விட 394 ரன்கள் பின்தங்கியிருப்பதால் இந்தப் போட்டியில் தோல்வியிலிருந்து இந்தியாவை மழை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற பரிதாப நிலை உருவாகியுள்ளது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய ஜெய்ஸ்வால் நீங்கள் மெதுவாக பந்து வீசுகிறீர்கள் என்று ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க்கிடம் கூறினார்.

அதற்கு பதிலடியாகஇரண்டாவது போட்டியின் முதல் பந்திலேயே அவரை டக் அவுட்டாக்கிய ஸ்டார்க் இப்போட்டியிலும் 2வது பந்தில் காலி செய்தார். குறிப்பாக இப்போட்டி துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக ஸ்டார்க் தம்முடைய காலில் வீசினால் அதை பிளிக் ஷாட் வாயிலாக பவுண்டரி அடிக்க ஜெய்ஸ்வால் பயிற்சி எடுத்தார். அதை ஸ்டார்க் பார்த்தாரா என்று தெரியவில்லை.

- Advertisement -

கலாய்த்த வாகன்:

போட்டி துவங்கியதும் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் மிட்சேல் மார்ஷை நிறுத்தி பந்து வீசினார். அதை பிளிக் ஷாட்டாக அடித்த ஜெய்ஸ்வால் அவரிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக அவுட்டாகி சென்றார். இது பற்றி மைக்கேல் வாகன் கலாய்த்தது பின்வருமாறு. “இப்படி அவுட்டாவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக ஜெய்ஸ்வால் மிட் விக்கெட் திசையில் நல்ல சமநிலையுடன் அற்புதமாக அடித்து பயிற்சி எடுத்தார்”

இதையும் படிங்க: மஹேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனையை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

“ஆனால் போட்டிக்குள் வந்ததும் அதே ஷாட்டில் அவர் பிளிக் செய்து அவுட்டாகியுள்ளார். போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அவர் ஸ்டார்க்கை எதிர்கொள்ள முயற்சித்தார். ஆனால் அது பயிற்சி. இது போட்டியின் அழுத்தம்” என்று கூறினார். அதாவது “தம்பி ஜெய்ஸ்வால் உண்மையான போட்டி என்பது சாதாரண பயிற்சி அல்ல” என்ற வகையில் மைக்கேல் வாகன் மறைமுகமாக கலாய்த்தார்.

Advertisement