241 ரன்ஸ்.. 535 நாட்கள்.. இந்தியாவை நொறுக்குவதில் பாண்டிங்கை முந்திய ஸ்டீவ் ஸ்மித்.. இரட்டை உலக சாதனை

Steve smith 2
- Advertisement -

காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் முதல் 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுகிறோம் என்று அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 21, மெக்ஸ்வீனி 9 ரன்களில் பும்ராவிடம் அவுட்டாகி சென்றார்கள். அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 12 ரன்களில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் நங்கூரமாக விளையாடினார்கள்.

- Advertisement -

ஸ்மித் உலக சாதனை:

அதில் தம்முடைய ஸ்டைலில் இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதலாவதாக அரை சதத்தை அடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதத்தையும் அடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். இத்தனைக்கும் காபா மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 இன்னிங்ஸில் கோல்டன் டக் அவுட்டான அவர் இப்போட்டியில் சுமாராக பந்து வீசிய இந்தியாவை அடித்து நொறுக்கினார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் தம்முடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடிய ஸ்மித் நங்கூரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 535 நாட்கள் கழித்து சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார். இதையும் சேர்த்து இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 10 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் ஜோ ரூட் உலக சாதனையை (இருவரும் தலா 10) ஸ்மித் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

திணறும் இந்தியா:

மேலும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் 15 சதங்கள் அடைத்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பாண்டிங் 14 சதங்கள் இந்தியாவுக்கு எதிராக அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: 340 ரன்ஸ் லீட்.. 143க்கு ஆல் அவுட்.. ஜோ ரூட் உலக சாதனை.. இங்கிலாந்தை தெறிக்க விடும் நியூஸிலாந்து

அத்துடன் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியின் சாதனையையும் ஸ்மித் (மூவரும் தலா 9) சமன் செய்துள்ளார். அந்த வகையில் ஹெட்டுடன் சேர்ந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை நொறுக்கி பும்ரா வேகத்தில் 101 ரன்களை குவித்து அவுட்டானார். மறுபுறம் ஹெட் 151 ரன்கள் தாண்டி பும்ராவிடம் அவுட்டானார். ஆனாலும் ஆஸ்திரேலியா 330-6 ரன்கள் குவித்துள்ளதால் இப்போட்டியில் இந்தியாவின் தோல்வி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

Advertisement