98 ரன்ஸ்.. மொத்தம் 366.. பாண்டியா அணியை நாக் அவுட் செய்த ரஹானே.. ஆஸியில் மிஸ் செய்யும் ரசிகர்கள்

Ajinkya Rahane
- Advertisement -

இந்தியாவில் சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூருவில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் பரோடா மற்றும் மும்பை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய பரோடா 20 ஓவரில் 158-7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் க்ருனால் பாண்டியா 30, சிவாலிக் சர்மா 36*, சஸ்வத் ராவத் 33 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக சூரியன்ஸ் செட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 159 ரன்களை துரத்திய மும்பைக்கு பிரித்வி ஷா 8 ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ரஹானே மிரட்டல்:

ஆனால் மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் அஜிங்கிய ரகானே அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 46 (30) ரன்களை அடித்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரஹானே பரோடா பவுலர்களை பந்தாடி சதத்தை நெருங்கினார்.

இருப்பினும் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 98 (56) ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் சதத்தை நழுவ விட்டு அவுட்டானார். அவருடைய அதிரடியால் 17.2 ஓவரிலேயே 164-4 ரன்கள் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று பரோடாவை நாக் அவுட் செய்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரகானே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அசத்தும் ரஹானே:

இந்தத் தொடரில் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் அவர் 52, 68, 22, 95, 84, 98 என அடுத்தடுத்து பெரிய ரன்கள் குவித்து சூப்பரான ஃபார்மில் உள்ளார். மேலும் இந்த தொடரில் மொத்தமாக இதுவரை அவர் 366* ரன்கள் குவித்துள்ளார். அதனால் நடப்பு சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ரகானே சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் அவரை வாங்கிய கொல்கத்தா அணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். மறுபுறம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய தொடரில் ரஹானே சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு கேப்டனாக முக்கிய பங்காற்றினார். அதனால் ஆஸ்திரேலியாவில் அவர் இந்தியாவுக்கு விளையாடியிருக்கலாம் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement