இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியினை தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக தவற விட்டிருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பயணித்த அவர் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அதன்பின்னர் அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் கேப்டனாக அணியில இணைந்த அவர் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரோஹித் சர்மா பார்மை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் :
ஆனால் அந்த போட்டியில் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த போட்டியின் போது மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக சிறப்பாக விளையாடியதால் இந்த தொடர் முழுவதுமே அவர்கள் துவக்க வீரர்களாக விளையாட வேண்டும் என்ற கருத்து நிலவி வந்த வேலையில் ரோகித் சர்மா அவர்களுக்கு தனது இடத்தை விட்டுவிட்டு மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார்.
இந்நிலையில் கடந்த பல போட்டிகளாகவே பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோகித் சர்மா மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஓப்பனராக களமிறங்கியிருக்க வேண்டும்.
ஆனால் துவக்க வீரர்களாக முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை அவர் பிரிக்க வேண்டாம் என்று நினைத்து விட்டார். இருப்பினும் துவக்க வீரராக பல ஆண்டு அனுபவம் வாய்ந்த அவர் தொடர்ந்து ஓப்பனராகவே விளையாடி இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவின் இயல்பான பேட்டிங் துவக்க வீரராக தான் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. எனவே அவர் மீண்டும் பார்முக்கு வர வேண்டுமெனில் துவக்க வீரராக விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
கடந்த 12 இன்னிங்ஸ்களாக அவர் சரியாக ரன்களை குவிக்கவில்லை என்பது தெரியும். ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரோகித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு வசதியாக சூழலை மாற்ற முயற்சித்து மீண்டும் ஓப்பனிங் செய்திருப்பேன் என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



