காபா மைதானத்தில் அந்த இந்திய பந்துவீச்சாளரை வெளுத்து வாங்குவேன் – ஆஸ்திரேலிய வீரர் சவால்

McSweeney
- Advertisement -

கடந்த இருமுறை சொந்த மண்ணில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா அணியானது இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என்கிற முனைப்புடன் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

பும்ராவை எதிர்கொள்ள தயார் :

இந்த தொடரின் முதல் போட்டியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு தற்போதைய நிலையில் இந்த தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. இதன்காரணமாக எதிர்வரும் மூன்று போட்டிகளில் வெற்றிபெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரானி நாதன் மெக்ஸ்வீனி பிரிஸ்பேன் மைதானத்தில் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொள்ள உள்ளதாக சவால் விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவுக்கு எதிராக விளையாடும் போது மிகவும் கடினமாக இருந்தது.

- Advertisement -

என்னுடைய கரியரின் ஆரம்பத்திலேயே பும்ராவைப் போன்ற ஒரு பவுலரை எதிர்கொண்டு உள்ளேன். அதனால் இதை விட கடினமான சூழல் இருக்காது என்று கருதுகிறேன். அவருடைய ஆக்சன் மற்றும் ஆங்கில் ஆகியவை வித்தியாசமாக இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவரது பந்துவீச்சை எதிர்கொண்டதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நிச்சயம் அடுத்த போட்டியில் அவருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடப்போகும் இடம் இதுதான் – சுயநலமற்ற எண்ணம்

முதல் தர கிரிக்கெட்டில் நான் இந்த மைதானத்தில் தான் அறிமுகமானேன். அதனால் இந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை வைத்து பும்ராவிற்கு பதிலடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

Advertisement