முதல் போட்டியில் ஜெய்த்த பும்ரா பிட்ச் மேப்பை பாத்து கத்துக்கோங்க.. ரோஹித்துக்கு சைமன் கேட்டிச் அறிவுரை

Simon Katich
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்த இந்தியா சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது.

ஆனால் 2வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அந்தத் தோல்விக்கு பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக அவரின் ஃபீல்ட் செட்டிங் மற்றும் பவுலர்களை பயன்பாடு எதிரணியை அட்டாக் செய்யும் வகையில் அமையவில்லை.

- Advertisement -

பும்ராவை பாருங்க:

இந்நிலையில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா ஸ்டம்ப் லைனில் வீசி வெற்றி கண்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேட்டிச் தெரிவித்துள்ளார். எனவே அதை ரோகித் சர்மா 3வது போட்டிக்கு முன் கற்றுக்கொள்ள வேண்டுமென கூறும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2 போட்டிகளை நீங்கள் ஒப்பிட்டால் முதல் போட்டியில் ரோகித் விளையாடவில்லை”

“முதல் போட்டியில் பும்ரா அடிலெய்டில் ஆஸ்திரேலியா செயல்பட்டது போலவே தன்னுடைய பவுலர்களை சரியான லென்த்தில் பந்து வீச வைத்து அபாரமாக கேப்டன்ஷிப் செய்தார். முதல் போட்டியில் 67-7 என ஆஸ்திரேலியா தடுமாறிய போது இந்தியா ஸ்டம்ப் லைனை அட்டாக் செய்து ஃபுல்லாகவும் நேரான லென்த் பகுதிகளிலும் பந்து வீசியது. ஆனால் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பிட்ச் மேப்பை பாருங்கள்”

- Advertisement -

கேட்டிச் அட்வைஸ்:

“அதில் பெரும்பாலான பந்துகள் 7 – 8 மீட்டர் பகுதியில் ஷார்ட் மற்றும் ஒய்டாக வீசப்பட்டுள்ளன. அங்கே தான் இந்தியா டிரிக்கை தவற விட்டது. அவை அனைத்தையும் ரோகித் சர்மா முதல் ஸ்லிப் பகுதியில் இருந்து பார்த்தார். எனவே அது நிகழும் போது அவர் தனது வேலையில் இன்னும் கொஞ்சம் முனைப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அதன் காரணமாக ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து அழுத்தத்திலிருந்து வெளிவந்து வெற்றி பெற்றது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜோ ரூட்டை முந்திய ப்ரூக்.. 23 வயதில் 27 மாதத்தில் அபார சாதனை.. ரோஹித், கோலி மெகா வீழ்ச்சி

அதே நிகழ்ச்சியில் ரோகித் சர்மா 3வது போட்டியில் பேட்டிங்கில் ரன்கள் குவித்து அசத்துவார் என்று நம்புவதாக மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் காலும் பெர்குசன் கூறினார். இதை அடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி காபாவில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.

Advertisement