ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியிருந்தது.
நான் மிடில் ஆர்டரில் விளையாடப்போகிறேன் :
இந்த வெற்றியின் மூலம் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அடிலெய்டு நகரில் பகலிரவு போட்டியாக துவங்கி நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். முதல் போட்டியின் போது விளையாடாத அவர் இந்த போட்டியில் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த போட்டியின் போது மிகச்சிறப்பான துவக்கத்தை அளித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை பிரிக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் இருவரும் துவக்க வீரராக தொடர்வார்கள் என்று அறிவித்த ரோகித் சர்மா டாசின் போதே தான் மிடில் ஆர்டரில் விளையாடுவதை உறுதிப்படுத்தி இருந்தார்.
அந்த வகையில் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். நான் தற்போது ஆஸ்திரேலியா வந்தடைந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. அதனால் இந்த போட்டியில் விளையாடும் அளவிற்கு மிகச் சிறப்பாக தயாராகி உள்ளேன்.
இதையும் படிங்க : அவுட் என்று ஒத்துக்கொண்டு வெளியேறிய கே.எல் ராகுலை திரும்ப அழைத்த அம்பயர் – என்ன நடந்தது?
அதோடு இந்த போட்டியில் நான் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளேன். இது எனக்கு வித்தியாசமான இருந்தாலும் அந்த சவாலை ஏற்று விளையாட தயாராக இருக்கிறேன் என ரோகித் சர்மா கூறியிருந்தார். அதன்படி இன்றைய போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் ரன் எதுவும் அடிக்காமலும், கேஎல் ராகுல் 37 ரன்களும் குவித்து ஆட்டமிழந்த வேளையில் ரோகித் சர்மா தற்போது ஆறாவது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.



