ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய கிரிக்கெட் அணி போராடி வருகிறது. முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றினர்.
குறிப்பாக 150க்கு ஆல் அவுட்டாகி இந்தியா தடுமாறிய போது அபாரமாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டினார். அந்த வகையில் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறியுள்ளார். அதன் காரணமாக உலகிலேயே பும்ரா சிறந்த பவுலர் ஹெட், ஸ்மித் போன்ற எதிரணி வீரர்களே பாராட்டி வருகிறார்கள்.
சிறந்த பும்ரா:
இந்நிலையில் பும்ரா சந்தேகமின்றி இந்தியாவின் மகத்தான பவுலர்களில் ஒருவர் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். குறிப்பாக கிளன் மெக்ராத், கர்ட்லி ஆம்ப்ரோஸ் போல பும்ரா துல்லியமாக பந்து வீசி குறைவான ரன்களை கொடுக்கும் பவுலர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“முதல் போட்டியில் கேப்டனான அவர் எழுந்து நின்று அசத்தியது முக்கியம். இந்த உலகில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலராக நான் இருக்கிறேன் என்பதை பும்ரா அனைவருக்கும் அப்போட்டியில் தெளிவாக காண்பித்தார். முதல் இன்னிங்ஸ் மட்டுமின்றி மொத்த போட்டியிலும் அவரால் பந்தை நகர்த்தி, தொடர்ந்து ஸ்டம்ப்களை அட்டாக் செய்து பந்து வீசினார்”
பாண்டிங் பாராட்டு:
“அது அவருக்கும் அப்போட்டியில் விளையாடிய மற்ற பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டியது. எனவே கண்டிப்பாக அவர் இந்தியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முன்பாக நிறைய ஜாம்பவான் வீரர்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 வகையான ஃபார்மெட்டிலும் அசத்தக்கூடிய பவுலர் என்று நான் கேட்டால் அது பும்ராவாக இருப்பார்”
இதையும் படிங்க: இந்தியா மாதிரி இல்ல.. பதில் சொல்லாம கையெழுத்து போட முடியாது.. ஐசிசிக்கு பென் ஸ்டோக்ஸ் கேள்வி
“இவை அனைத்தும் விக்கெட்டுகளைப் பற்றியது கிடையாது. உச்சகட்ட அளவில் தொடர்ச்சியாக அசத்துவதை பற்றியதாகும். கர்ட்லி ஆம்ப்ரோஸ், கிளன் மெக்ராத் ஆகியோர் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களைப் போன்றவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதை கடினமாக்குவார்கள். அதே போல பும்ராவுக்கு எதிராக நீங்கள் ரன்களை குவிக்க முடியாது. அவரைப் போன்றவர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதை கடினமாக்கி பேட்டிங்கை அசௌகரியமாக மாற்றுவார். அவருக்கு எதிராக ரன்களை தாண்டி விக்கெட்டை விடக்கூடாது என்று பேட்ஸ்மேன்கள் நினைக்கும் போது பேட்டிங் கடினமாகிறது” எனக் கூறினார்.



