இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த ஊரில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்திய அணி தங்களை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் போட்டியில் மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 534 ரன்களை சேசிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அன்றைய நாள் முடிவில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நான்காவது நாளில் ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன என்று ஜோஸ் ஹேசல்வுட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு இதை நீங்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஹேசல்வுட் பதிலளித்தார்.
ஹேசல்வுட் பரிதாபம்:
அதை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்தன. அடுத்த சில நாட்களில் ஜோஸ் ஹேசல்வுட் காயத்தால் இரண்டாவது போட்டியில் விலகுவதாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் உண்மை நிலவரத்தை பேசியதற்காக ஹேசல்வுட்டை காயம் என்ற பெயரில் ஆஸ்திரேலியா கழற்றி பெற்றுள்ளதாக சுனில் கவாஸ்கர் மறைமுகமாக சாடியுள்ளார்.
இது பற்றி ஸ்போர்ட்ஸ்டார் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “3வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஜோஸ் ஹேசல்வுட் பேட்டிக்குப்பின் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் அணியில் பிளவு இருப்பதால் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பேசியது தெளிவாக தெரிந்தது. குறிப்பாக அவர் பேட்ஸ்மேன்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று பேட்டியில் தெரிவித்திருந்தார்”
காயம் என்ற பெயரில்:
“தற்போது சில நாட்கள் கழித்து ஹேசல்வுட் இரண்டாவது போட்டியில் காயத்தால் விலகு உள்ளதாக தெரிகிறது. சொல்லப்போனால் அவர் தொடர் முழுவதும் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. விசித்திரமான விஷயம் என்னவெனில் ஹேசல்வுட் அந்த பேட்டி கொடுத்த பின் இவ்வாறு நடந்தது என்பதை யாரும் கணிக்கவில்லை. எனவே இது மர்மம் மர்மமாக இருக்கிறது”
இதையும் படிங்க: நம்பர் ஒன் பிளேயர் என்பதை தாண்டி நல்ல மனுஷன்.. பும்ரா தான் அதுக்கு சரியானவர்.. புஜாரா பேட்டி
“கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் இப்படி நடந்தது. இப்போது ஆஸ்திரேலிய அணியில் நடக்கிறது. அதை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். இதை எடுத்து இரண்டாவது போட்டி பகல் இரவாக நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் ஹேசல்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமாளித்து வெற்றி பெற இந்திய அணியும் தயாராகி வருகிறது.



