முதல் டெஸ்ட் முக்கியம்.. இதை செய்யலன்னா ஆஸியில் இம்முறை இந்தியா ஜெய்க்கிறது கஷ்டம்.. ஹர்பஜன்

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு படைத்தது. ஆனால் இம்முறை சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.

அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா விளையாட உள்ளது. இருப்பினும் சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்ததால் இம்முறை ஆஸ்திரேலியாவில் இந்தியா வெல்வது கடினம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:

“இம்முறை இந்தியா வெல்வதற்கு 50 – 50% மட்டுமே வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக நம்முடைய திடமான பேட்ஸ்மேன்கள் கூட எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறுவார்கள். நம்முடைய சீனியர் வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருக்க வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அது உங்களுடைய பிரச்சனையை தீர்க்காது”

“ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் நல்ல சூழ்நிலைகள், ஆடுகளங்கள் இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் நன்றாக வருவார்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கு புஜாரா போல பந்தை பழையதாக்கி விளையாடும் வீரர்கள் நமக்குத் தேவை. கே.எல் ராகுல் அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டாலும் கிளாஸ் பிளேயர். இந்தத் தொடரில் நமக்கு 50 – 50 வெற்றி வாய்ப்பு இருக்கும்”

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

“இம்முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற கொஞ்சம் அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் சொந்த ஊரில் விளையாடுகிறார்கள். மறுபுறம் இந்தியா சொந்த ஊரில் சந்தித்த தோல்வியால் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து இருப்பார்கள். இந்தியா முதல் தொடரில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்குவது முக்கியம்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியர்களுக்கு எதிரா எதுவும் பேசக்கூடாதா? கம்பீர் அப்படி சொன்னதில் தப்பில்ல.. கங்குலி பேட்டி

“ஒருவேளை முதல் போட்டியில் இந்தியா நல்ல துவக்கத்தை பெறவில்லையெனில் தொடர் முழுவதும் நல்ல சண்டையை கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படலாம்” என்று தெரிவித்தார். அந்த வகையில் முதல் போட்டியில் வென்றால் அதே வேகத்தில் இந்தியா தொடரை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இதை அடுத்து முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement