வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் இப்படி நடந்தது கஷ்டமா இருக்கு.. தோல்விக்கு பிறகு – மார்க்ரம் வருத்தம்

Markram
- Advertisement -

சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணியானது நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது வருத்தம் :

அதன்படி நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய :

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 மட்டுமே ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியதோடு இந்த தொடரிலும் ஒரே ஒரு வெற்றியுடன் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : இந்தப்போட்டியில் இறுதிவரை சென்று வெற்றிக்காக போராடியது பெருமையாக இருக்கிறது. மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் மிக சிறப்பாக விளையாடியிருந்தும் டாப் ஆர்டரில் சரியாக விளையாடவில்லை.

- Advertisement -

மிடில் ஆர்டரிலும், கீழ் வரிசையிலும் வந்த பேட்ஸ்மேன்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்த மைதானத்தில் 220 ரன்கள் என்பது சேசிங் செய்யக்கூடிய ஒன்றுதான். நாங்களும் கிட்டத்தட்ட அந்த சேஸிங்கை நெருங்கியும் அதை தவறவிட்டிருக்கிறோம். இதுபோன்ற போட்டியில் ஆட்டம் ஒரு ஓவரில் தான் திரும்பும்.

இதையும் படிங்க : இதுதான் எங்க ஸ்டைல்.. இனிமே இப்படித்தான் ஆடப்போறோம்.. வெற்றிக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் பேட்டி

அந்த வகையில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் பேட்டிங்கில் தவற விட்டுள்ளதாக நினைக்கிறேன். நிச்சயம் இந்த போட்டியில் ஏற்பட்ட தவறை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் பலமாக வெற்றிக்கு திரும்புவோம் என எய்டன் மார்க்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement