தினேஷ் கார்த்திக் பதில் இனி இந்த இளம் வீரருக்கு தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் – விவரம் இதோ

Karthik
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

இந்தத் தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் இடம் கிடைத்தும் தினேஷ் கார்த்திக் மூன்று போட்டிகளிலும் சோபிக்க தவறியதால் அதன் காரணமாக இனி அவருடைய இடத்திற்கு பதிலாக அடுத்த உலகக் கோப்பையையும் மற்றும் வரும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பினை வழங்கி இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் திட்டத்தில் பிசிசிஐ உள்ளது.

Iyer

எனவே இனி தினேஷ் கார்த்திக் இடம் கிடைக்காது என்றும் அவருக்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டன் அய்யருக்கு தான் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்திய அணியில் பல மாற்றங்கள் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Advertisement