ரோஹித் சர்மா இந்த கேப்டன்ஷிப் வித்தையை தோனியிடம் கத்துக்கனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுரை

Sanjay Manjrekar
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் இந்தியா முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு சுருண்டது. அதன் வாயிலாக தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அதே பிட்ச்சில் அபாரமாக பேட்டிங் செய்து 402 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா சதமடித்து 134, டேவோன் கான்வே 91, டிம் சௌதீ 65 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

தடுமாறிய ரோஹித்:

அதன் காரணமாக இந்தியாவை விட நியூசிலாந்து 356 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமாக பார்க்கப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் இந்தியா போராடி டிரா செய்யுமா என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்தது மோசமான சாதனை படைக்க முக்கிய காரணமானது.

அதனால் மனதளவில் பின்னடைவை சந்தித்தாரோ என்னவோ தெரியவில்லை பவுலர்களை சரியாக பயன்படுத்துவதில் ரோகித் சர்மா தடுமாற்றமாக செயல்பட்டார். மறுபுறம் அதை பயன்படுத்தி இங்கிலாந்தின் டெயில் என்டரான டிம் சௌதீ அதிரடியாக விளையாடி 65 (73) ரன்கள் குவித்தார். அந்தளவுக்கு இப்போட்டியில் ரோஹித் சர்மாவின் பவுலிங் மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

தோனியை பாத்து:

இந்நிலையில் ரோஹித் சர்மா எதிரணியினர் சேதத்தை ஏற்படுத்தும் முன் பந்து வீச்சு மாற்றங்களை சரியாக செயல்படுத்துவது பற்றி தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “போட்டி சேதமடைந்து கட்டுப்பாட்டை மீறும் முன் பந்து வீச்சு மாற்றத்தை செய்து முன்கூட்டியே தடுக்கும் தனித்துவமான திறமை தோனியிடம் இருந்தது”

இதையும் படிங்க: அப்பாடா 1338 நாட்கள்.. பாகிஸ்தான் நிம்மதி.. 3 வலையை விரித்து இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது எப்படி?

“அந்த குணத்தை ரோகித் சர்மா தனது தலைமைக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் தோனி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணுக்கு வெளியே இந்திய அணி தடுமாற்றமாகவே விளையாடியது. எனவே அவரிடம் பார்த்து ரோகித் சர்மா கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? என சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் அதிருப்தியுடன் பதிலளித்து வருகிறார்கள்.

Advertisement