இந்த ஒரு அட்ஜஸ்மென்ட் செஞ்சா போதும்.. ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் அசத்துவாரு.. கும்ப்ளே அட்வைஸ்

Anil Kumble
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 2024 – 25 பார்டர் – காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் வெற்றி பெற்று இந்தியா சரித்திர சாதனை படைத்தது. அதே போல இம்முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது

மேலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். அப்படியே கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால்:

இருப்பினும் இதற்கு முன் அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை என்பதால் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய மைதானங்களில் கேரி, பவுன்ஸ் ஆகியவற்றுக்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டால் கண்டிப்பாக ஜெயஸ்வால் அசத்துவார் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால் தனது அணுகு முறையை மாற்றுவார் என்று நான் நினைக்கவில்லை”

“ஆஸ்திரேலியாவுக்கு அவர் முதல் முறையாக சென்றாலும் கடந்த 2 முறை அங்கே நமது அணி வென்றுள்ளது பெரிய சாதகமாகும். அது அவரைப் போன்ற இளம் வீரர்க்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற அணிகள் கடந்த கால தோல்விகளால் தயங்குவார்கள். ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 2 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே தற்போது சூழ்நிலை கச்சிதமாக இருக்கும்”

- Advertisement -

சிறிய அட்ஜஸ்ட்மென்ட்:

“நல்ல டெக்னிக்கை கொண்டுள்ள ஜெய்ஸ்வால் ரன்கள் அடிப்பதற்கான பசியை கொண்டுள்ளார் என்பதே சாவியாகும். அதனால் அவர் ஆஸ்திரேலியாவில் அசத்தாமல் இருப்பதை நான் பார்க்கப் போவதில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து அசத்தும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் நிதானமாக துவங்கினார்”

இதையும் படிங்க: 30 – 60 ஓவர்ஸ்.. எல்லாத்தையும் பாத்துட்டாரு.. இந்தியாவுக்காக விராட் கோலி ஆஸியில் இதை செய்வாரு.. மைக் ஹெசன்

“ஆனால் சூழ்நிலைகள் தமக்கு சாதகமானதும் அவர் தனது இயற்கையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் பன்முகத்தன்மை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவருக்கு உதவும். ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வதே அவருடைய ஆட்டமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா போல ஆஸ்திரேலியாவில் சீம் மூமென்ட் இருக்காது. நியூசிலாந்தில் கொஞ்சம் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ், கேரி மட்டுமே இருக்கும். அதற்கு மட்டும் அவர் தன்னை உட்படுத்திக் கொண்டால் போதும்” என்று கூறினார்.

Advertisement