பேட்ஸ்மேனா இருக்காதன்னு அட்வைஸ் சொன்ன கம்பீருக்கு நன்றி.. ஆட்டநாயகன் விருது வென்ற நிதிஷ் ரெட்டி

Nitish Reddy 2
- Advertisement -

டெல்லியில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிதிஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்த உதவியுடன் 221-9 ரன்கள் குவித்தது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் சுமாராக விளையாடி 20 ஓவரில் 135-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, நித்திஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் போட்டியின் வெற்றியையும் சேர்த்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே இந்தியா வென்றுள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் நிதிஷ்:

இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய நித்தீஷ் ரெட்டி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக 41-3 என இந்தியா தடுமாறிய போது அதிரடியாக விளையாடிய அவர் 74 (34) ரன்கள் குவித்து ரிங்குவுடன் சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அதே போல பந்து வீச்சில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை எடுக்க தமக்கு பயிற்சி கௌதம் கம்பீர் ஆலோசனை கொடுத்ததாக நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிதிஷ் இது பற்றி பிசிசிஐ வீடியோவில் பேசியது பின்வருமாறு. “உண்மையில் இதற்காக நான் கம்பீர் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார்”

- Advertisement -

கம்பீர் கொடுத்த அட்வைஸ்:

“குறிப்பாக பவுலிங் செய்யும் போது நீ உன்னை பவுலராக நினைக்க வேண்டும். பேட்ஸ்மேனாக பவுலிங் செய்கிறோம் என்று நினைக்காமல் உன்னை ஒரு பவுலராக நினைத்துக்கொண்டு பந்து வீசு என்று கம்பீர் சொன்னார். அது ஏதோ ஒரு வகையில் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. எனவே இதற்காக நான் கௌதம் கம்பீருக்கு நன்றி சொல்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 823 ரன்ஸ்.. தார் ரோட் பிட்ச்சில் பாகிஸ்தானை அழவிட்ட இங்கிலாந்து.. இந்தியாவை முந்தி 20 வருட உலக சாதனை

இத்துடன் ஒரு சர்வதேச டி20 போட்டியில் 70 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் நித்திஷ் ரெட்டி படைத்தார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற்று இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வங்கதேசம் போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement