இந்திய அணியின் கஜினி யார்.. ரோஹித் சர்மாவை நேருக்கு நேராக கலாய்த்த சூரியகுமார், துபே

Team India
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான வீரராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2013 முதல் துவக்க வீரராக எதிரணிகளை பந்தாடும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (264), ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் 17 வருடங்கள் கழித்து இந்தியா வென்றது. அதனால் ரோஹித் சர்மாவை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஹிட்மேன் என்றழைப்பது வழக்கமாகும். அப்படிப்பட்ட ரோஹித் சர்மா சிறுசிறு விஷயங்களை மறக்கும் நியாபக மறதியைக் கொண்டவர் என்று விராட் கோலி சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

- Advertisement -

மறக்கும் ரோஹித் சர்மா

அதை உறுதி செய்யும் வகையில் 2023இல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வேண்டுமா அல்லது ஃபீல்டிங் செய்ய என்பதை மறந்து விட்டு தடுமாறினார். அதே போல மற்றொரு போட்டியில் டாஸ் வீசும் நிகழ்வில் நாணயத்தை அவர் தன்னுடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விட்டார். அதன் பின் டாஸ் வீசுமாறு சொன்ன போது நாணயம் எங்கே? என்று நடுவரிடம் ரோஹித் கேட்டது வைரலானது.

இந்த நிலையில் கிரேட் இந்தியன் கரன்சர்மா எனும் பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மற்றும் சில இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் சில சுவாரசியமான கலகலப்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இந்திய அணியில் அதிகமாக மறக்கக்கூடிய கஜினி யார் என்று கேட்டார்.

- Advertisement -

இந்திய அணியின் கஜினி:

அது கேட்கப்பட்டதும் ரோஹித் சர்மா நம்மை தான் சொல்கிறார்கள் என்று “ஓ நோ” என்று சொல்லி வெட்கமான ரியாக்சன் கொடுத்தார். அதன் பின் சிவம் துபே “டாஸ் வீசும் போது ரோகித் சர்மா நாணயத்தின் 2 பக்கங்களின் பெயர்களை மறந்து விடுவார்” என்று சொன்னார். அதைத்தொடர்ந்து “இல்லை. ரோகித் சர்மா பெயரை மட்டும் மறக்க மாட்டார். நாணயத்தையே மறந்து விடுவார்” என்று சொன்னார்.

இதையும் படிங்க: 151 ரன்ஸ்.. ருதுராஜ், சுதர்சன் ஏமாற்றம்.. நானும் இந்தியன் என்பதை அகர்கருக்கு ஓயாமல் காட்டும் ஈஸ்வரன்

அந்த வகையில் ரோஹித் சர்மாவின் மறதியைப் பற்றி சூரியகுமார் மற்றும் துபே கிண்டலடிக்கும் வகையில் சொன்னது அரங்கத்தை சிரிக்க வைத்தது. ரோஹித் சர்மாவும் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு அனைவருடன் சேர்ந்து சிரித்தார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement