என்ன மனுஷங்க இவரு.. அஷ்வினுக்கு ஒரு புது ஆஃபர் வச்சிருக்கேன் – வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய இந்த முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது.

அஷ்வினை நெனைச்சா பெருமையா இருக்கு :

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வின் (113) மற்றும் ஜடேஜா (86) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 376 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வங்கதேச அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 149 ரன்களுக்கு சுருண்டு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

அதன்பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் (109) மற்றும் சுப்மன் கில் (119) ஆகியோரது சிறப்பான சதம் காரணமாக 287 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதன் காரணமாக 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு சுருண்டது. இதன்காரணமாக இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 133 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 113 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு பந்துவீச்சிலும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டை கைப்பற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சென்னை மைதானத்தில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியிருந்த ரோகித் சர்மா போட்டி முடிந்து கூறியதாவது :

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வினை நினைத்தால் நிச்சயம் பெருமையாகவே இருக்கிறது. ஏனெனில் தற்போது தான் ஐபிஎல் தொடரில் அஸ்வின் சிறப்பாக விளையாடியிருந்தார். அதன்பின்னர் சில காலம் இந்திய அணிக்காக விளையாடாத அவர் நேரடியாக டி.என்.பி.எல் தொடரில் விளையாடினார். டிஎன்பிஎல் தொடரில் அவரது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் பேட்டிங் செய்து வந்தார்.

இதையும் படிங்க : வினோ மன்கட் 68 வருட சாதனை காலி.. இந்தியாவின் மேட்ச் வின்னராக சச்சினை முந்தி வரலாறு படைத்த அஸ்வின்

டிஎன்பிஎல் அவர் பேட்டிங் செய்து விதத்தை பார்த்து இனிவரும் போட்டிகளில் அவரை முன்கூட்டியே களமிறக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அஸ்வின் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அவர் அசத்தியிருந்தார். அவரது அனுபவம் இந்த போட்டியில் தெரிந்தது. இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அஸ்வினுக்கு முன்கூட்டியே பேட்டிங் செய்ய வாய்ப்பை வழங்க இருக்கிறேன் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement