81/1 டூ 158/4.. ஜாம்பவான் வால்ஷ் சாதனை சமன் செய்து.. வங்கதேசத்தை மிரட்டும் அஸ்வினுக்கு.. கோலி பாராட்டு

Ashwin and Kohli
- Advertisement -

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்களும் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஹசன் மக்முத் 5 விக்கெட்டுகளும் சாயத்தினர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுக்க இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 4 வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

அஸ்வின் அசத்தல்:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 109, சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 515 என்ற மெகா இலக்கை துரத்தும் வங்கதேசத்திற்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஜாஹீர் ஹசன் 33 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்.

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நஜ்முல் சவாலை கொடுத்ததால் வங்கதேசம் 81-1 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அப்போது மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் சாத்மன் இஸ்லாமை 35 ரன்களில் சுப்மன் கில்லின் சூப்பரான கேட்ச்சால் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்து வந்த மோனிமுல் ஹைக்கை 13 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

சாதனை சமன்:

அதை பார்த்த விராட் கோலி வேற லெவல் என்ற வகையில் கைதட்டி பாராட்டினார். அதோடு நிற்காத அஸ்வின் அடுத்ததாக வந்து அனுபவ வீரர் முஸ்பிக்கர் ரஹீமை 13 ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் சரிவை சந்தித்த வங்கதேசம் அணிக்கு கேப்டன் நஜ்முல் சாண்டோ தொடர்ந்து நிதானமாக விளையாடி அரை சதமடித்து 51* ரன்களும் சாகிப் அல் ஹசன் 5* ரன்களும் எடுத்த போது 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது 158-4 ரன்கள் குவித்துள்ள வங்கதேசம் இன்னும் 357 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்தியா வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: சச்சின் மாதிரியே கோலிக்கும் இந்திய மண்ணில் பிரச்சனை இருக்கு.. ரன்ஸ் குவிக்க இதான் வழி.. சஞ்சய் மஞ்ரேக்கர்

இப்போட்டியில் இதுவரை அடுத்துள்ள 3 விக்கெட்டுகளையும் சேர்த்து அஸ்வின் மொத்தம் 519* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் வாழ்நாள் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். வால்ஷ் 132 போட்டிகளில் எடுத்த 519 விக்கெட்டுகளை அஸ்வின் 101* போட்டிகளிலேயே எடுத்துள்ளார்.

Advertisement