இந்திய அணிக்காக சுயநலமின்றி விராட் கோலி செஞ்ச விஷயத்தை பாத்தீங்களா.. சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

Sanjay Manjrekar 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கை கொடுத்தனர்.

வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் எதிர்பார்த்ததைப் போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சுமாராக பேட்டிங் செய்து 149 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

ஏமாற்றத்துடன் விராட் கோலி:

அதன் பின் 227 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 81-3 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 10, ரோஹித் சர்மா 5, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் சுப்மன் கில் 33*, ரிஷப் பண்ட் 12* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 308 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா இப்போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் 6 ரன்களில் அவுட்டான விராட் கோலி 2வது இன்னிங்சில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றார். இருப்பினும் அப்போது மெஹதி ஹசன் வீசிய ஒரு பந்தை விராட் கோலி சரியாக அடிக்க தவறினார். அப்போது வங்கதேசம் அணியினர் எல்பிடபிள்யூ முறையில் கேட்டதை தொடர்ந்து நடுவரும் விராட் கோலி அவுட்டென அறிவித்தார்.

- Advertisement -

சுயநலமற்ற விராட் கோலி:

அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி ரிவியூ எடுக்க சுப்மன் கில் உதவியை நாடினார். அப்போது கில் ரிவியூ எடுக்குமாறு சொல்லியும் அவுட்டாக இருக்கும் என்ற கருதிய விராட் கோலி வெளியேறினார். ஆனால் ரிப்ளேயில் பார்த்த போது விராட் கோலி பேட்டில் பந்து உரசியதால் அவுட்டில்லை என்று தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் அந்த தருணத்தில் இந்திய அணியின் நலனுக்காகவே சுயநலமின்றி விராட் கோலி ரிவ்யூ எடுக்கவில்லை என சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 12 ஃபோர்ஸ் 3 சிக்ஸ்.. பஸ்பால் போல சஞ்சு சாம்சன் அதிரடி கம்பேக்.. 5 வருடம் கழித்து அசத்தல்.. பிசிசிஐக்கு மெசேஜ்

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விராட் கோலிக்காக வருந்துகிறேன். கண்டிப்பாக அவர் பந்தை நாம் அடித்தோம் என்று நினைக்கவில்லை. பந்து ஸ்டம்ப்பில் அடித்ததா என்று மட்டும் சுப்மன் கில்லிடம் அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். அப்போது சுப்மன் கில் ரிவியூ எடுக்குமாறு சொல்லியும் தன்னுடைய அணி 3 ரிவியூக்களை வைத்துக் கொள்வதற்காக விராட் கோலி ஏமாற்றத்துடன் வெளியேறினார்” என்று கூறியுள்ளார்.

Advertisement