சேப்பாக்கத்தில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.. போட்டியின் இரண்டாம் நாள் அன்று நடைபெற்ற சம்பவம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் குவித்துள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் நடைபெற்ற சம்பவம் :

இதன்மூலம் இந்திய அந்யாந்து வங்கதேச அணியை விட 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி 300 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் நாளான இன்று சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதும் நடந்திடாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற முக்கிய விடயம் யாதெனில் :

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மட்டும் 17 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் இன்று எஞ்சியிருந்த 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகளை இழந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இப்படி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே நாளில் அதிக விக்கெட் விழுவது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்ததே அதிகபட்சமாக இருந்தது. கடைசியாக 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போது போட்டியின் நான்காம் நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்திருந்தன.

இதையும் படிங்க : இந்திய அணிக்காக சுயநலமின்றி விராட் கோலி செஞ்ச விஷயத்தை பாத்தீங்களா.. சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

அதனை தொடர்ந்து தற்போது தான் ஒரே நாளில் 17 விக்கெட் விழுந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 376 ரன்களை குவிக்க வங்கதேச அணி 149 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement